Advertisement

தலைமை நீதிபதியின் பாதுகாப்பு மோசம்

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய்க்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் இடையேயான பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து டில்லி இணை பாதுகாப்பு போலீஸ் பிரிவு இணை கமிஷனர் ஐடி சுக்லா எழுதி உள்ள கடிதத்தில், தலைமை நீதிபதிக்காக டில்லி போலீஸ் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசம். யார் வேண்டுமானாலும் தலைமை நீதிபதி அருகே சென்று, அவருக்கு மாலை அணிக்கவோ அல்லது அவருடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை தான் உள்ளது. இது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


இந்த உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிறகு, தலைமை நீதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அனைத்து பாதுகாப்பு அமைப்புக்களின் பொறுப்பு என பாதுகாப்பு அமைப்புக்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக அவரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    அயோத்தியா வழக்கு மும்முரமாக நடக்கும் இந்த நேரத்தில் தலைமை நீதிபதிக்கு பாதுகாப்புகள் மிக முக்கியம். அவர் நவம்பர் பதினெட்டில் பதவி முதிர்வு அடையும் முன் இந்த வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட இருக்கிறது இந்த நேரத்தில் அவரின் பாதுகாப்பு மிகமிக முக்கியம். சம்பத்தப்பட்டவர்கள் உடனே ஆவன செய்ய வேண்டும்.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    நீதி துறையில் எவ்வளோ கேஸ்கள் பல வருடங்களாக முடங்கி கிடக்கின்றன. அதை தீர்த்து வைக்க துப்பில்லை.இவருக்கு இன்னும் அதிக பாதுகாப்பு ரொம்பவும் அவசியமோ. இந்தியாவில் ஒன்றுக்கும் உறுப்பிடாத சுடாலின் போன்றவர்களுக்கு பாத்து காப்பு எதற்கு. இந்தியாவில் எந்த பயங்கரவாதமும் இல்லை. அப்படி இருக்கும் பொது பாதுகாப்பு என்றபெயரில் அரசாங்கம் அனாவசிய செலவுகளுக்கு இடம் கொடுக்கிறது.

    • Dalda - Varanasi,இந்தியா

      இந்திய திருநாட்டின் தலைமை நீதிபதி ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் உயர்ந்த பதவியைப் பற்றி பேசும்போது ஸ்டாலின் தங்கள் நினைவுக்கு வருகிறாரே அதற்காகவே அவருக்கும் அதற்கு இணையான பாதுகாப்பு அவசியமாக்கி விட்டீர்கள்

  • hari - thiruchi,இந்தியா

    அப்புறம் எதுக்கு மோடிக்கு பாது காப்பு?

  • thamodaran chinnasamy - chennai,இந்தியா

    அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் பொறுப்புடன் நடந்து நாட்டின் இறையாண்மையை காக்க வேண்டுகிறோம். பாதுகாப்பு இருக்கின்றது என்பதால் தான் அவர்களும் அவர்களுடைய கடமையை செவ்வனே செய்ய முடியும் .

  • Shake-sphere - India,இந்தியா

    இவருக்கு இப்போது கொடுக்கப்படும் பாதுகாப்பே தேவையில்லாதது, அதிகப்படியானது

    • hari - thiruchi,இந்தியா

      அப்புறம் எதுக்கு மோடிக்கு பாது காப்பு?

Advertisement