Advertisement

ராஜஸ்தானில் காங்., எம்.எல்.ஏ., மகன் கைது

தோல்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், கான்ஸ்டபிள்களாக பணியாற்றுபவர்கள், ஹரிஓம், விஜய் பால். இவர்கள், கடந்த திங்களன்று, வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு கும்பல், அவர்களை பிடித்து, ராஜஸ்தான் - மத்திய பிரதேச எல்லைக்கு கொண்டு சென்று தாக்கியது. தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை மீட்டனர். இது பற்றி போலீார் வழக்கு பதிவு செய்து, மத்திய பிரதேச காங்., - எம்.எல்.ஏ., அடல் சிங் கன்சானாவின் மகன், பன்கு உட்பட, 14 பேரை கைது செய்தனர். மணல் கடத்தலை தடுத்ததால், கான்ஸ்டபிள்கள் இருவரையும், அந்த கும்பல் கடத்தி சென்று தாக்கியது, விசாரணையில் தெரிய வந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

    //மணல் கடத்தலை தடுத்ததால், கான்ஸ்டபிள்கள் இருவரையும், அந்த கும்பல் கடத்தி சென்று தாக்கியது// இதுவல்லவோ ஜனநாயகம். மணல்கடத்தும் அவர்கள் உரிமையில் தலையிட்டால் இதுதானே கதி. கான்க்ராஸ் கட்சியின் கலாச்சாரத்தை செவ்வனே கடைபிடிக்கும் இவர்களை மனமார அல்லவா பாராட்ட வேண்டும்.

    • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

      காங்கிரஸ் அரசு தனது சொந்த கட்சி என்றும் பாராமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திருக்கிறது ....

    • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

      அதேபோல் தான் பாஜகவும் உத்தரகாண்ட் துப்பாக்கி வைத்து நடனம் ஆடிய எம் எல் ஏ வையும் கட்சியை விட்டு நீக்கியது. ஆனால் அதற்கு உங்களை போன்றவர்களின் அலப்பறைகள் ஏராளம்.

  • Sanjay - Chennai,இந்தியா

    எங்கிருந்தாலும் முட்டு கொடுக்க வரவும்

Advertisement