Advertisement

பாரம்பரிய செங்கொடி காரில் சீன அதிபர் ஜின்பிங் பயணம்

நாளை இந்தியா வர உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை விமான நிலையத்தில் இருந்து, பாரம்பரிய 'செங்கொடி' பொருத்தப்பட்ட காரில், மாமல்லபுரம் செல்ல உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், நாளை (அக்.11) முதல் இரண்டு நாட்கள், மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். ஆசிய கண்டத்தின் வல்லரசாக திகழும் சீனாவின் அதிபர், இந்தியா வருவதை உலக நாடுகள், பல்வேறு கோணங்களில் உற்று நோக்கிய வண்ணம் உள்ளன.


அதேநேரம், ஆசிய கண்டத்தில் வல்லரசு ஆகும் தொலைநோக்கில் பயணிக்கும் இந்தியாவுக்கு, சீன அதிபர் வருவது, ஆசிய நாடுகளையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்த சந்திப்புக்கு, தமிழக அரசும், மத்திய அரசும், பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளன. நாளை மதியம், 1:00 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ள, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், தேவையான பொருட்களை எடுத்து செல்லவும், சீனாவில் இருந்து, நான்கு நவீன கார்கள் சென்னைக்கு வந்துள்ளன.சீன விமானத்தில், அவை சென்னை விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. அங்கிருந்து, சென்னை விமான நிலையத்துக்கும், கிண்டி ஐ.டி.சி., சோழா ஹோட்டலுக்கும், அங்கிருந்து மாமல்லபுரத்துக்கும் இடையே, வாகனங்களை இயக்கி, பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.நாளை இந்தியா வரும் சீன அதிபர், அந்த நாட்டின் பாரம்பரியமான, 'செங்கொடி' பொருத்தப்பட்ட வாகனத்தில், பயணிக்க திட்டமிடப் பட்டுள்ளது. சீனாவின் கம்யூனிசத்தை எடுத்து காட்டும் வகையில், செங்கொடி என்ற பொருளிலான, 'ஹாங்கி' என சீன மொழி பெயரில், இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவை சேர்ந்த, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து, 'சீனாவின் பர்ஸ்ட் ஆட்டோமொபைல் ஒர்க்ஸ்' என்ற நிறுவனம், 1950ல், ஹாங்கி காரை உருவாக்கியது. மற்ற நவீன ரக சொகுசு கார்களால், இந்த காருக்கான மவுசு குறைந்ததால், 1981 முதல், 1983 வரை, ஹாங்கி கார் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.


முன்னாள் சீன அதிபரும், சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும் கருதப்பட்ட, டெங் ஜியாவோபிங், 1984ல் ஹாங்கி காரில், சீன ராணுவ அணி வகுப்பை பார்வையிட்டார். இதை தொடர்ந்து, மீண்டும் ஹாங்கி காருக்கு மவுசு ஏற்பட்டு, உற்பத்தி துவங்கியது.இந்த கார் படிப்படியாக நவீன வகைக்கு மாற்றப்பட்டு, தற்போதுள்ள ஹாங்கி கார், 2013ல் அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டின் அதிபர் மற்றும் முக்கிய தலைவர்கள் பயன்படுத்துவதற்கு, பழைய பாரம்பரிய கார் வடிவத்தை மாற்றாமல், அதேநேரம் நவீன பாதுகாப்பு அம்சங்களுடனும், குண்டு துளைக்காத உலோகங்கள், கண்ணாடிகளாலும், ஹாங்கி கார் தயாரிக்கப் பட்டுள்ளது.இந்த காரை தான், தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங், தன் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறார். மேலும், சீன ராணுவ அணிவகுப்பையும், இந்த காரில் சென்று பார்வையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்த பாரம்பரியமான காரிலேயே, இந்தியாவிலும், ஜி ஜின்பிங் வலம் வர உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார், 18 அடி நீளம், 6.5 அடி அகலம் மற்றும், 5 அடி உயரமும், 3,152 கிலோ எடையும் உடையது. இந்த காரில், சீனாவின் கம்யூனிச ஆட்சியை பறைசாற்றும் செங்கொடியும் பறக்கும். நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • S.P. Barucha - Pune,இந்தியா

  32 நாடுகளுடன் சீனா எல்லை கொண்டுள்ளது.

 • கோமாளி - erode,இந்தியா

  சீனா உண்டியல் குலுக்கி நாடும் இல்லை.. இங்கிருக்கும் உண்டியல் குலுக்கிகளும் சீனாவிடம் பணம் பெறுவதில்லை.. பெரிய நாட்டாமை தான் இந்த குரங்குகளுக்கு பணம் கொடுத்து ஆடச் சொல்வது. சீனத் தொடர்பு நமக்கு நல்லதே

 • Sangeedamo - Karaikal,இந்தியா

  முன்னெல்லாம், இந்திய ஜனாதிபதியோ, பிரதமரோ அரசு முறை பயணமா சீனாவுக்கு போனா..., திருப்பதி கோவில் பெருமாள் தரிசனம் மாதிரி, "போனா போகட்டும்... அவ்ளோ தூரத்துலிருந்து வந்துட்டான்" னு பரிதாபப்பட்டு, பத்தே பத்து நிமிஷம் சீன அதிபர் தரிசனம் குடுப்பாரு இருநாட்டு தலைவர்களோட..., கூட்டு பொறியல் அறிக்கை எல்லாம் கிடையாது. சீன வெளியுறவு செயலரோட ஒன்னுவிட்ட உறவுகள் யாராவது, "இந்தியாவுடன் நட்புறவை விரும்புகிறோம்" ன்னு, சர்வதேச மீடியாவுக்காக... வழக்கமான ஒரு பேட்டிய குடுத்துட்டு, "அவிங்களுக்கு டீ-யக் குடுத்து பத்தி விடுங்கடா"னுட்டு போயிடுவான். நம்மாளுங்க, சீன கிரீன் டீ நாலு பாக்கெட் வாங்கி பேக்ல சொருவிட்டு, யுனான் மாகாண மேம்பாலத்துல சறுக்கி விளையாண்ட்டு, மஞ்சள் நதிக்கு குறுக்கால கட்டுன அணக்கட்டு மேல, நின்னு போட்டோ புடுச்சுட்டு ... ஊரு வந்து சேருவாங்க. ஆனால் இன்று ..... 🌷இந்திய ராணுவம் டோக்லாம்ல 72 நாட்கள் பிடிவாதமா பட்டறை போட்டது. 🌷அருணாச்சல் விமானப்படை சீரமைப்பு. 🌷எல்லைல மிகப்பெரிய விமானப் படை போர் பயிற்சி. 🌷திபெத்தை நோக்கி நிறுத்தப் பட்டிருக்கும்... நூறு T90 டாங்ஸ் & பிரம்மோஸ் மிஸைல்ஸ். 🌷சீனாவின் எதிரிகளான... வியட்நாம் & தைவானுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் விற்பனை. 🌷 சீன மிரட்டலுக்கு பயந்து மன்மோகன் ஆட்சியில் பின்வாங்கிய, வியட்நாம் எண்ணெய் துரப்பன பணியை மீண்டும் தொடங்கியது. 🌷 தென்சீன கடல் பகுதியில் இந்திய போர் கப்பல்களை நிறுத்தியது. 🌷இந்தியாவை சுற்றி சீனா கோர்த்த, 'முத்து மாலை' திட்டத்தை அறுத்தெறிந்தது சாபகார் போர்ட் நிறுவியது 🌷 சீனாவுக்கு கொடுக்க இருந்த புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பானுக்கு மாற்றியது. 🌷 இந்திய சீன பிரச்சனையில், சித்தாந்த ரீதியில் சீனாவை ஆதரிக்கும் ரஷ்யாவை, பிரச்சனையில் இருந்து விலகி நிற்க வைத்தது. 🌷 எந்த காலத்திலும் இல்லாமல் இப்போது... அமெரிக்க, இந்திய, ஜப்பான் நாடுகளின் கூட்டமைப்பு & கடற்படைகளின் கூட்டு போர் பயிற்சி. இதில் ஆஸ்திரேலியாவும் இணையப் போகிறது. 🌷மிக முக்கியமாக, பாஸ்வேர்ட் போட்டு LOG IN கொடுத்த... அடுத்த இருபது நிமிடங்களில், சீனாவின் கிழக்கு எல்லைவரை நலம் விசாரிக்கும், 'அக்னி' குடும்பத்து ஏவுகணைகள். 🌷மோடி பாஸ்வேர்ட் போட்டு LOG IN கொடுக்க தயங்காத ஆள் என்பதும் சீனாவுக்கு தெரியும். 🌷உலக அரசியல் மாறிக் கொண்டிருப்பதையும், அது... இனி இந்தியாவை சுற்றியே சுழலும் என்பதையும் சீனா நன்றாக உணர்ந்து விட்டது. 🌷மேலும் ஒரு முக்கிய தகவல், சீன வரலாற்றுலேயே முதன் முறையாக சீன அதிபர் ஒருவர், ஒரு வெளிநாட்டு தலைவருக்காக அவருடன் இரண்டுநாள் முழுவதும் செலவிட்டது. அமெரிக்க அதிபருக்கே அந்த மரியாதைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல். ❤பலமான ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். மோடி என்ற தேச_பக்தரின் உழைப்பால் மட்டுமே, உலக அரங்கில்... நம் நாட்டிற்கு இந்த மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது

  • vigneshwaran - madurai,இந்தியா

   //பாஸ்வேர்ட் போட்டு LOG IN கொடுத்த... அடுத்த இருபது நிமிடங்களில், சீனாவின் கிழக்கு எல்லைவரை நலம் விசாரிக்கும், 'அக்னி' குடும்பத்து ஏவுகணைகள். // அருமை நண்பரே.....

  • Ramesh Nagarajan - chennai,இந்தியா

   பிரமாதமான கருத்து. மிக்க நன்றி.

 • P.Chandrasekar - palani,இந்தியா

  சீனாவிடம் நாம் எப்பொழுதும் கவனமுடனே அணுகவேண்டும்....எவ்வளவு நட்பு பாராட்டினாலும் நமக்கு துரோகமிலைக்க தயங்க மாட்டார்கள்

 • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

  இந்த காரின் விலை 25 கோடியா உண்டியல்குலுக்கிகளே? அல்லது 10 கோடியா இல்லை 15 கோடியா ?

Advertisement