Advertisement

பெட்ரோல் விலை ரூ.76.38 ;டீசல் விலை ரூ.70.51

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் அதன் விலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.



கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, சிலநாட்கள் விலை அதிகரிக்கும் அல்லது குறையும் அல்லது எவ்வித மாற்றமுமின்றி முந்தைய நாளில் உள்ள விலை நிர்ணயிக்கப்படும்.




அதன்படி, சென்னையில் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.57 ஆகவும் விற்பனையானது. இன்று, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோல் விலையில் 5 காசு குறைத்து 76.38 ஆகவும் டீசல் விலையில் 6 காசு குறைத்து 70.51 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதனையடுத்து தற்போது, சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.38 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.51 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement