Advertisement

அவதூறு வழக்கு :சூரத் கோர்ட்டில் ராகுல் ஆஜர்

சூரத் : பிரதமர் மோடி குறித்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று (அக்.10) சூரத் கோர்ட்டில் ஆஜரானார், ராகுல்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, காங்., முன்னாள் தலைவர், ராகுல் பேசியதாவது: நாட்டின் காவலாளி என தன்னை கூறி வருகிறார் மோடி. ஆனால் 'அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று எப்படி உள்ளது' என்றார். ராகுல் பேச்சு குறித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. இருந்தும் ராகுல் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று (அக்.10) நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து ராகுல் இன்று சூரத் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது, தான் நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ராகுலின் மனு மீது பதிலளிக்க மனுதாரருக்கு அவகாசம் அளித்து, இவ்வழக்கு விசாரணையை டிசம்பர் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    பட்டாயா போயிட்டு நல்ல ரிலாக்ஸ் பண்ணி விட்டு வந்தால் பின்னேயும் டென்சன் படுத்தி பின்னேயும் பட்டாயா போக வைத்துவிடுவார்கள் போல இருக்கின்றது. பாவம் பெட்டி வேணும் அவர்கள் என்ன பண்ணுவார்கள் 49 பேர் தேச துரோக வழக்கு கான்செல் ஆயிருச்சு இல்லே இப்போ இந்த பக்கமாக முயற்சிக்கின்றது இந்த அநீதிபதிகள்??? ஆமா இது நேற்று காலையில் நடந்ததா இல்லவே இல்லை??அப்போ இது வரைக்கும் என்னய்யா குறட்டை தூக்கம் அநீதிபதியவர்களே???

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    இனி நிம்மதியாக பட்டயாவில் இருக்க முடியாது , எந்த உல்லாச சுற்றுலாவிலும் இருக்க முடியாது , வழக்கிற்காக இந்தியா வந்த உவந்து போகவேண்டும்.

  • konanki - Chennai,இந்தியா

    பச்ச பிள்ளையை பட்டயலேந்து பாதில வர சொன்னா எப்பிடி எஜமான்?

  • HSR - MUMBAI,இந்தியா

    நான்சன்ஸ் என்று உன் குடும்பம் கூப்பிட்டவுடன் கை கட்டி கும்புடுரெங்க எசமான் நுண் சொல்லி நிப்பானே அந்த பிம்ன்னு நெனச்சியாயாடா? மோடிடா. இனிமே இந்திய பிரதமருக்கு ஒரு தனி மரியாதை இருக்கு.. உன் மரியாதை இனி உன் கையில்.

  • kurinjikilan - Madurai,இந்தியா

    அடுத்த பட்டயா டிரிப் எப்போம்ணே ?

    • Cheran Perumal - Radhapuram,இந்தியா

      ஏதாவது எலெக்ஷன் கிலெக்ஷன் வந்தா போறதுதான்.

Advertisement