Advertisement

மாமல்லபுர சிற்பங்களை 12ல் பார்வையிடுகிறார் ஜின்பிங்

Share
சென்னை,: மாமல்லபுரத்தின் சிற்பங்களையும், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், 12ம் தேதி, பிரதமர் மோடியுடன் இணைந்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிடுகிறார்.

பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இரு நாட்டு நல்லுறவு தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பேச்சு நடத்த உள்ளார். இதற்காக, சீன அதிபர், 11ம் தேதி பிற்பகல், சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து, மதியம், 2:00 மணிக்குள், கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட சோழா நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இரண்டு மணி நேரம் ஓய்வுக்கு பின், மாலை. 4:00 மணிக்கு, ராஜிவ் காந்தி சாலை வழியாக, மாமல்லபுரம் செல்கிறார்.
அங்கு, இரு நாட்டு நல்லுறவு தொடர்பாக, பிரதமர் மோடியுடன், அவர் பேச்சு நடத்துகிறார். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவிலில், இந்த சந்திப்பு நடக்கிறது.
இந்நிகழ்ச்சியை முடித்து, இரவு, 8:00 மணிக்கு, சீன அதிபர், மீண்டும் சென்னை திரும்புகிறார். இரவு, நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.மறுநாள் காலை, 8:00 மணிக்கு, நட்சத்திர ஓட்டலில் இருந்து, மாமல்லபுரம் கிளம்புகிறார். அங்கு, பிரதமருடன் பேச்சை தொடரவுள்ளார்.இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிடுகின்றனர். அங்கிருந்து, மதியம், 12:00 மணிக்கு புறப்படும் சீன அதிபர், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலை அடைகிறார். மதியம், 2:00 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து, சீனா திரும்புகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  மணி வாரியாக ஊடகங்கள் அட்டவணை கொடுப்பது பெருந்தலைவர்கள் சந்திப்பின்போது பாதுகாப்பு கோணத்தில் சரியா?

 • svs - yaadum oore,இந்தியா

  ...அப்படியே அண்ணா சமாதிக்கும் மாலை அணிவிக்கலாம் ....மெரினாவே சமாதியா என்று சீனா அதிபர் மலைத்து போவார் .....அருகில் கண்ணகி சிலைக்கும் மாலை அணிவிக்கலாம் ....தமிழ் ஆர்வலருக்கு மகிழ்ச்சி ..... சுற்றலா வளர சுத்தம் சுகாதாரம் அவசியம் ....இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் உச்சத்தில் உள்ளதாக செய்தி.....சீனா அதிபர் கண்ணில் இந்த செய்தி படாமல் சாமர்த்தியமாக மறைத்து விட்டார்கள் .... சுகாதார ஊழியர் தண்ணீர் தேங்காமல் இருக்க தினமும் சொன்னாலும் அவரை திட்டி வீட்டில் நுழைய விடாமல் கதவை பூட்டி விடும் மக்கள் ......

 • சீனி - Bangalore,இந்தியா

  தமிழக சுற்றுலா துறைக்கு விளம்பரப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு. ஒவ்வொரு ஜனவரியிலும், பொங்கல் விழாவின் போது, ஏப்ரலில் தமிழ்புத்தாண்டின் போது மாமல்லபுரத்தில் 2 வாரம் "பாரம்பரிய தமிழ் உணவுத்திருவிழா", பலவித கலை நிகழ்ச்சிகளுடன் நடத்தலாம். போட்டி வைத்து சிறந்த உணவகத்துக்கு விருது வழங்கலாம். அப்போதான் கூட்டம் கூடும், வெளிநாட்டு டிவிகளை அழைத்து வந்து காட்டலாம், அப்போதான் வெளினாட்டு பயணிகள் வருவார்கள். மேலும் பள்ளி , கல்லூரி மாணவர் கலைக்குழுக்களுக்கு போட்டி நடத்தி பரிசு கொடுக்கலாம், அப்போது தான் கலையும் கலாச்சாரமும் வளரும். ஊழல் இல்லாமல் போட்டி பரிசு கொடுத்து விழா நடத்தினால் தான் சுற்றுலா கவனிக்கப்படும். மேடை போட்டு, மைக் பிடித்து அரசியவாதிகள் வாய்கிழிய பேசி, சால்வை போர்த்திக்கொள்வதால் எந்த தொழிலும் வளராது.

 • Sanjay - Chennai,இந்தியா

  சீன அதிபர் பகுத்தறிவாளர் அவர் பார்க்கவேண்டிய இடம் வேப்பேரியில் உள்ள பெரியார் சமாதி, மெரினாவில் உள்ள கட்டுமர சமாதி. கட்டுமர சமாதியில் ஒரு தயிர்வடை மற்றும் முரசொலி பத்திரிக்கை சீன அதிபர் வைத்தால் பகுத்தறிவாளர் கள மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்

 • svs - yaadum oore,இந்தியா

  சீனா அதிபர் மாமல்லபுரம் தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் முன்னாள் சீனா இந்தியா தூதுவர் மற்றும் இப்போதைய சீனா வெளியுறவு துறை அமைச்சர் .......அதற்கு மோடி அரசாங்கம் உடனடியாக அனுமதி ..... சீனா வெளியுறவு துறை அமைச்சர் பாண்டிச்சேரி ஆரோ வில் நீண்ட காலம் பணி புரிந்த சீனா பேராசிரியருக்கு நெருங்கிய நண்பர் ..... இந்த சீனா பேராசிரியர் பல இந்தியா நூல்கள் சீனா மொழியில் மொழி பெயர்த்துள்ளார் .....

Advertisement