Advertisement

குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

மெரினா:பெங்களூரில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய பெண், மெரினா கடற்கரையில், நேற்று இரவு, தன், 6 வயது மகளை கொலை செய்தார். 3 வயது மகனையும் கத்தியால் குத்திய அந்த பெண், தானும் தற்கொலைக்கு முயன்றார்.

பெங்களூரைச் சேர்ந்தவர், பவித்ரா, 32. இவருக்கு, தனுஷ்யா, 6, என்ற மகளும், பத்மேஷ் என்ற, 3 வயது மகனும் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, நேற்று, வீட்டை விட்டு, மகள், மகனுடன் பவித்ரா வெளியேறினார்.

பின், தன் குழந்தைகளுடன் பேருந்தில் நேற்று இரவு, மெரினா வந்தார். விவேகானந்தர் இல்லம் எதிரே, மணல் பரப்பில் அமர்ந்து பிள்ளைகளை விளையாட விட்டு கொண்டிருந்தார். தொடர்ந்து விளையாடிய குழந்தைகள் இருவரும், அசதியால் தாயின் மடியில் படுத்திருந்தனர்.அப்போது பவித்ரா, தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, மகளின் கழுத்தை அறுத்தார். தொடர்ந்து மகனின் கழுத்தை அறுத்து, அவரும் தனக்கு தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். இதில், சம்பவ இடத்திலேயே தனுஷ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.


உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாயையும், மகனையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடும்ப தகராறில் பெற்ற மகளை கொலை செய்து, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், மெரினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெரினா போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement