Advertisement

சிறுமியை கொன்ற, பாசக்கார சித்தி கைது

Share
சேலையூர்:கணவரின் முதல் மனைவியின் மகளை, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த சித்தியை, சேலையூர் போலீசார், நேற்று கைது செய்தனர்.

சென்னை, குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், சக்கரபாணி தெரு விரிவில் உள்ள,
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர், பார்த்திபன், 36; மென்பொருள் நிறுவன ஊழியர். இவரது மகள் ராகவி, 6; தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

பார்த்திபனின் முதல் மனைவி சரண்யா, 2014ல் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து, 2016ல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த சூர்யகலா, 33, என்பவரை, அவர் இரண்டாவதாக திருமணம் செய்தார்.திருமணமானது முதல், சிறுமி ராகவியை, சூர்யகலா ஒதுக்கி வந்தார். இதனால், கணவன்- - மனைவி இடையே, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், ராகவியை வளர்க்க, சூர்யகலா மறுத்ததால், பார்த்திபன் விவாகரத்து வழங்க முடிவு செய்தார். பின், இரு வீட்டாரும் பேசி, சமாதானம் செய்தனர்.


அப்போது, ராகவியை, தன் மகள் போல் பார்த்துக் கொள்வதாக கூறி, சூர்யகலா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.இதற்கிடையே, ஓராண்டிற்கு முன், சூர்யகலாவிற்கு ஆண் குழந்தை
பிறந்தது. அப்போது முதல், சூர்யகலா, மீண்டும் ராகவியை ஒதுக்கி உள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, பார்த்திபனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூர்யகலா, 'நீண்ட நேரமாக ராகவியை காணவில்லை' எனக் கூறினார்.

வீட்டிற்கு வந்த பார்த்திபன், வீட்டிலும், அருகில் உள்ள பூங்கா மற்றும் மாடியிலும் தேடினார். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள, மைதானத்தின் புதர் மண்டிய பகுதியில், ராகவி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார். அவரை மீட்ட பார்த்திபன், குரோம்பேட்டை அரசு
மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, ராகவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்
இறந்துவிட்டதாக கூறினர்.

சேலையூர் போலீசார், சந்தேக மரணம் என, வழக்குப் பதிந்து -விசாரித்தனர். சூர்யகலா மீது
சந்தேகம் இருப்பதாக, பார்த்திபனின் முதல் மனைவி சரண்யாவின் பெற்றோர் மற்றும்
உறவினர்கள் கூறினர்.போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். இதில், அவர் சிறுமியை மாடிக்கு விளையாட அழைத்துச் சென்று, அங்கிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சூர்யகலாவை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    குழந்தை இருக்கும்போது இரண்டாவது கலியாணம் செய்தவனை கைது செய்து தண்டிக்கனும்.

Advertisement