Advertisement

ரூ.76 ஆயிரம் கோடி வாராக்கடன் தள்ளுபடி

புதுடில்லி: நாட்டின் மிகப் பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி, 76 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.

வாராக்கடன்கள் குறித்து, தனியார் செய்தி சேனல் சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில், இந்தாண்டு மார்ச் வரையிலான காலத்தில், பாரத ஸ்டேட் வங்கி சார்பில், 76 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன்கள், 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த, 220 வங்கி கணக்குகளுக்கு உரியவை என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல், இந்த குறிப்பிட்ட காலத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி, 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த, 94 வங்கி கணக்குகளுக்கு உரிய, 27 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (76)

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    அதான் நான் சொல்கீரேன் உங்கள் பணத்தை பாங்கில் போடாமல் போஸ்டல் பாங்கில் போடுங்கள்.அங்கே லோன் கிடையாது. உங்கள் பணம் யாரும் திருடமாட்டாகள். . il n

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    யாருக்கு லோன் எளிதில் கிடைக்கிறது. வேண்டிய ஆளுக்கு லஞ்சம் கொடுத்து கவனித்தால் உடனே, லோன் கிடைக்கும். ஆனால், லோன் வாங்கியவன் கொடுத்த லஞ்சத்திற்கு தண்ணி காட்டுவான் .

  • mohan - chennai,இந்தியா

    பாவம், காந்தி தாத்தா இருந்தால் மிகவும் மன கஷ்டம் அடைவார்....1949 இற்கு பின் சுதந்திரம் வாங்கிய, சீன இன்று உலக வல்லரசு...இதே போல் பல சிறிய கிழக்கு நாடுகள், 1965 இற்கு பின் சுதந்திரம் வாங்கியவை....

  • mohan - chennai,இந்தியா

    பாவம் ஒரு விவசாயி கடன் வாங்கி ட்ராக்டர் வாங்கி, சில தவணைகள் கட்ட முடியாவிட்டால், ட்ராக்டர் பறி முதல் செய்ய படுகிறது..அதுவும், கடன் கட்ட கூடிய விவசாயி... வெளி நாட்டிற்கு ஓடும், நபர் அல்ல....

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

    //// இந்த கடன்கள், 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த வாங்குனா தள்ளுபடி... ஆனா... அக்கவுண்ட்டில் பேலன்ஸ் இல்லென்னா.. அவங்களுக்கு பைன்...ன்னு காச புடுங்குறது.... இதுதான் சட்டம்... போங்கய்யா, நீங்களும் உங்க சட்டமும்....

Advertisement