Advertisement

இந்திய கலாசாரத்துக்கு எதிரானது காங்கிரஸ்: அமித் ஷா

Share
கைதல்: ''இந்திய கலாசாரத்துக்கு எதிரானது காங்கிரஸ்; அதனால் தான், 'ரபேல்' விமானத்துக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'சஸ்திர பூஜை' செய்ததை எதிர்க்கிறது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

ஐரோப்பிய நாடான பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் போர் விமானம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. விஜயதசமி தினத்தில் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானத்துக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சஸ்திர பூஜை செய்தார். விமானத்தின் மீது, குங்குமத்தில், 'ஒம்' என, எழுதினார். மலர்கள் துாவியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டார்.

வழக்கம்:பின், விமானத்தின் டயர்களுக்கு அடியில், எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது போர் விமானம் ஏற்றப்பட்டது. இந்த பூஜைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. 'மத நிகழ்ச்சியான விஜயதசமியும், ரபேல் போர் விமானமும், ஒன்றுக் கொன்று பொருந்தாது. ஒரு மதத்தினர் கொண்டாடும் பண்டிகையை, போர் விமானத்துடன் ஏன் இணைக்க வேண்டும். காங்., ஆட்சியில், 'போபர்ஸ்' பீரங்கிகள் வாங்கப்பட்டன. ஆனால், இது போல் பூஜை செய்யவில்லை' என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம், கைதலில் நேற்று நடந்த, பா.ஜ.,தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாவது: மத்திய அரசு எதைச் செய்தாலும், அதை எதிர்ப்பது காங்கிரசின் வழக்கமாகிவிட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை, காங்., எதிர்த்தது. ஆனால், நாடு முழுதும் மக்கள் வரவேற்றுள்ளனர்.

பாதுகாப்பு:காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில், அரசியல் இல்லை. நாட்டின் பாதுகாப்பு கருதியே, இந்த முடிவை, மத்திய அரசு எடுத்தது. இந்திய கலாசாரத்தை பின்பற்றியே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத், ரபேல் விமானத்துக்கு சஸ்திர பூஜை செய்தார். இதையும் காங்கிரஸ் குறை கூறுகிறது. விஜய தசமி அன்று, சஸ்திர பூஜை செய்யக்கூடாதா; காங்கிரஸ் கட்சி, இந்திய கலாசாரத்திற்கு எதிரானது. அதனால் தான், சஸ்திர பூஜையை எதிர்க்கிறது. இவ்வாறு, அமித் ஷா கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ

  இங்கு இந்திய கலாச்சாரம் என்று ஒன்று கிடையாது.. ஒவ்வோவோ மாநிலத்திற்கும் ஒரு வகையான கலாச்சாரம் உண்டு. அதை பொதுமை படுத்தாதீர்கள்.. காங்கிரஸ் கிண்டல் சேதத்து தவறுதான். அரசுக்கு மதம் கெடையாது.. அதைத்தான் அரசு கடை பிடிக்க வேண்டும்..அரசு என்றுமே அறிவியல் பூர்வமாக மட்டுமே நடுந்து கொள்ள வேண்டும்.. மதம் சார்ந்து நடந்து கொள்ள கூடாது...

 • Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா

  \\\\ காங்., ஆட்சியில், 'போபர்ஸ்' பீரங்கிகள் வாங்கப்பட்டன. ஆனால், இது போல் பூஜை செய்யவில்லை' என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மல்லிகார்ஜுன கார்கே கூறினார். //// போபர்ஸு பீரங்கி வாங்குனதே இத்தாலி -க்கு ஆர்டர் கொடுக்கணும் -ன்னுதானே ?? அந்தப் பீரங்கியெல்லாம் நல்ல்லா வேலை செய்யுது ..... அதனால போபர்ஸ் பீரங்கி வாங்குனதுல ஊழல் -ன்னு சொல்றதுல அர்த்தமே இல்ல -ன்னு கூசாம அடிச்சு உட்டது காங்கிரஸ் திருடனுங்க தான் .....

 • Sukumar Talpady - Mangalore ,இந்தியா

  காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த பொழுது இந்திய கடற் படையோட எத்தனையோ சிறு ஆயுத கப்பல்கள் வெள்ளோட்டம் விடப்பட்டன .அப்பொழுதெல்லாம் பூஜை செய்துதான் கடல் மேல் விட்டார்கள் . அப்பொழுதெல்லாம் மதசார்பின்மை எங்கே போனது ? ஏன் இப்பொழுது மட்டும் பெரியதாக ஊதுகிறார்கள் ? வயிற்றெச்சலா ? ஏன் புதியதாக ரயில் சேவை , பஸ் சேவை விட்டபொழுதெல்லாம் பூஜை செய்யவில்லையே ? ரயில் வண்டிக்கு அலங்காரம் செய்யவில்லையோ ? தேங்காய் உடைக்க வில்லையோ ? வண்டிகளுக்கு சந்தானம் , குங்குமம் தடவ வில்லையோ ? இப்படியே பேசிக்கொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும் .

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  நீங்க பொறந்து வளர்ந்து படிச்சு கலியாணம் கட்டி புள்ளை பெத்தது எல்லாமே கான் கிராஸ் ஆட்சியில தான். அதுனால உமக்கும் எங்க கலாச்சாரம் தெரிஞ்சு இருக்க லவலேசமும் வாய்ப்பே இல்லை. இல்லை இல்லை

 • KumariKrishnan Bjp - chennai,இந்தியா

  வெள்ளைக்கார கிருஸ்தவர்களால் துவக்கப்பட்ட பினாமி கட்சிதான் காங்கிரஸ் காங்கிரஸ் பார்வையில் ஆயுதபூஜை என்ன பொங்கலும் தீபாவளியும்கூட குற்றம்தான்

Advertisement