Advertisement

டவுட் தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சமூக நீதி வரலாறு எல்லாம், அப்போது, வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

டவுட் தனபாலு: நீங்க தான், தைரியமான ஆளாச்சே... ஸ்டாலின் என்னென்ன விளையாட்டுகளில் ஈடுபட்டாருன்னு சொல்ல வேண்டியது தானே என, மக்கள் கேள்வி கேட்டால், என்ன பதில் சொல்லுவீங்க என்பது தான், என்னோட, 'டவுட்'

***

பிரதமர் மோடி: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது, நம் பொறுப்பு.

டவுட் தனபாலு: இதெல்லாம் சரி தான்... உங்களுக்கு கடிதம் எழுதின, இயக்குனர் மணிரத்னம் உட்பட, 49 பிரபலங்கள் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கு... மக்களோட கருத்துக்களையும் மதிக்கணும் என்பது, உங்களுக்கு ஞாபகம் இல்லையோன்னு, 'டவுட்' வருதே!

lll***
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இந்தியா போலவே பழம்பெருமை வாய்ந்த சீன நாட்டின் அதிபர் ஜின்பிங், தமிழகம் வருவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரை, 'வருக, வருக' என, மனதார வரவேற்கிறேன்.

டவுட் தனபாலு: பிரதமர் மோடி தமிழகம் வந்தால், 'கோ பேக் மோடி' என, உங்கள் ஆட்கள், 'டுவிட்டரில்' பிரசாரம் செய்கின்றனர். ஆனால், நீங்களோ, சீன அதிபருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கிறீர்கள். உங்கள் தந்தை கருணாநிதி இருந்திருந்தால், 'சீனாவுக்கு எப்போதும் என் நெஞ்சில் இடமுண்டு...' என, கூறியிருப்பார். அதிபரை நீங்கள் வரவேற்பதைப் பார்த்தால், உங்களுக்கு நெருக்கமான யாரோ, சீனாவில் தொழில் துவங்க உள்ளனர் என்ற, 'டவுட்'டை ஏற்படுத்துகிறது!
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    ஸ்டாலின் என்னென்ன விளையாட்டுகளில் ஈடுபட்டாருன்னு வெளிப்படையா சொல்ல முடியாது. ஒருவேளை வரும்காலத்தில் கூட்டணி நிர்பந்தம் தேவைப்பட்டால்....?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நாற்பது சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் மையத்தில் வசித்த பலருக்கும் தெரிந்த விளையாட்டுகள்தான் அவை

  • Kalyanaraman -

    பின்னே, சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிச்சா கூட்டணி வேலைக்கு எடுத்த தோழர்கள் ஒழுங்கா வேலை செய்ய மாட்டார்களே. குடுத்த கூலிய வேலை செய்து அவர்கள் கழிக்கும்வரை பொத்திகிட்டு இருக்க வேண்டியதுதான்.

Advertisement