Advertisement

தண்ணி இல்லாத கிணத்துக்கு தண்டமாக ரூ.27 லட்சம்!

''நம்பர் தராம அலைக்கழிக்கிறாங்க பா..'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''அவ்வளவு பெரிய ஆட்கள் யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழகத்துல, உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்குல்ல... மாவட்டங்கள்ல, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு, ஆவணங்கள் அச்சிடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்துட்டு இருக்கு பா... ''அதுவும் இல்லாம, அரசியல் கட்சியினரும், சுயேச்சையா போட்டியிட விரும்புறவங்களும், கலெக்டர் அலுவலகங்களுக்கு வந்து, பல சந்தேகங்கள் கேட்கிறாங்க...

''இதுக்கெல்லாம் விளக்கம் கேட்க, கலெக்டர்கள், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்னா, யாரும் மொபைல் எண்களை தரலை பா... ''மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு போன் அடிச்சாலும், 'முக்கிய அதிகாரிகள், மீட்டிங்ல இருக்காங்க... வெளியூர் போயிட்டாங்க'ன்னு தான் தகவல் சொல்றாங்க... ''இதனால, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பாடு திண்டாட்டமா இருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.

''மதுரை பஞ்சாயத்தை, சென்னையில பேசி முடிச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''என்ன விவகாரம் பா...'' என்றார் அன்வர்பாய்.

''மதுரை மாநகர் மாவட்ட, தி.மு.க., பொறுப்புக் குழு உறுப்பினர்கள் தளபதிக்கும், வேலுசாமிக்கும் லவலே சமும் ஆகாது... சமீபத்துல நடந்த நிர்வாகிகள் கூட்டத்துல, ரெண்டு பேரும், காரசாரமா மோதிண்டா ஓய்... ''ரெண்டு தரப்பையும், சென்னை அறிவாலயத்துக்கு அழைச்சு, முதன்மைச் செயலர் டி.ஆர்.பாலு, 'பஞ்சாயத்து' பேசியிருக்கார்... இதுல, வேலுசாமி மேல தான் தப்புன்னு தெரிஞ்சதாம் ஓய்...

''அப்பறமா, 'மூத்த நிர்வாகியான நீங்களே, இப்படி நடந்துக்கலாமா'ன்னு, அறிவுரை சொல்லி அனுப்பியிருக்கார்... 'மதுரை மாநகர் மாவட்டத்துக்கு, எல்லாரையும் அனுசரிச்சு போறவரை, பொறுப்பாளரா போடணும்'னு, தொண்டர்கள் கோரிக்கை வச்சிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''தண்ணியே வராத கிணத்துக்கு, லட்சக்கணக்குல நிதி ஒதுக்கியிருக்காவ வே...'' என, கடைசி தகவலை கையில் எடுத்தார், அண்ணாச்சி.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''பெரம்பலுார் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்துல, கடுமையான தண்ணீர் பஞ்சம் இருக்கு... ''இங்க இருக்கிற ஊரணி- குளத்துல, ஒன்றிய பொது நிதியில, 18.71 லட்சம் ரூபாய் மதிப்புல, புதுசா கிணறு தோண்டுனாவ வே... ''ஆனா, ஊற்றே இல்லாததால, கிணத்துல தண்ணியே வரலை... இப்ப, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்புல, இந்த கிணத்துக்கு, மின் மோட்டார், பம்ப் ரூம், பைப் லைன் அமைக்கிற வேலைகளுக்காக, சமீபத்துல, 28 லட்சம் ரூபாய் மதிப்புல, டெண்டர் விட்டிருக்காவ வே...

''தண்ணி ஊறாத கிணத்துக்கு, இப்படி லட்சக்கணக்குல நிதி ஒதுக்கீடு செய்றதை விட்டுட்டு, அந்தப் பணத்துல, ஊற்று இருக்கிற இடமா பார்த்து, புதுசா கிணறு தோண்டுங்கன்னு, கிராம மக்கள் சொல்லியிருக்காவ... ஆனா, அதிகாரிகள், பழைய கிணத்துல பணத்தை போட்டு, தங்களை வளப்படுத்திக்கிறதுல தான் குறியா இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

அரட்டை முடிந்து, நாயர் கிளம்ப, பெரியவர்கள் நடையைக் கட்டினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Siva - Aruvankadu,இந்தியா

    ஊட்டி குன்னூர் தேசிய நெடுஞ்சாலை.... ஒரு கிணறு (காணிக்கராஜ் நகர்) பருவமழை நேரத்தில் தண்ணீர் இல்லை அதற்கு நிதி இல்லாத பேரூராட்சி எத்தனை லட்சம் கொட்டுகிறது... இத்தனைக்கும் மெயின் ரோட்டில் உள்ளது.. பயன்பெறும் குடும்பம் 10.. என்ன தாராளம்.. 100 குடும்பம் உள்ள கிராமம் சரியான தண்ணீர் வசதி இல்லை.. யார் பயன் பெற இந்த வெட்டி வேலை.. மாவட்ட ஆட்சித்தலைவர் இதை அறிவாரா..

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    இட ஒதுக்கீட்டில் வேலைக்கு வந்ததே இப்படி அரசு சொத்துக்களை திருடத்தானே........

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    நாட்டாமெ ....முடிவை மாத்து ...னு விவேக்கை கூப்பிட்டு சொல்ல வைக்க வேண்டும்

Advertisement