Advertisement

மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையை கடைபிடிப்போம்

பாரதத்தின் நவீன வரலாற்று சரித்திரத்திலும், சுதந்திர பாரதத்தின் எழுச்சியிலும் முக்கிய பிரபலங்களின் பெயர்கள், என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளன;
அவற்றில் மஹாத்மா காந்தியின் பெயர் முக்கியமானது.பாரதம், ஆன்மிக பூமி. ஆன்மிகத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை கருதியே, பாரத அரசியலை, ஆன்மிக அடிப்படையிலேயே அமைக்க, காந்தி முயற்சித்தார்.மகாத்மா காந்தியின் முயற்சி, தேர்தல் அரசியலோடு நின்றுவிடாமல், சமுதாயம் மற்றும் அதை வழிநடத்த சாத்விகமான ஒழுக்கத்தை உண்டாக்குவதில், அவர் மிகவும் முனைந்து செயல்பட்டார்.
உலகெங்கிலும் காணப்பட்ட தன்னல நோக்கம், அதிகார வெறி மற்றும் குறைபாடுகள் உள்ள அரசியலை முற்றிலும் தவிர்த்தார். உண்மை, அஹிம்சை, தற்சார்பு மற்றும் தனிமனித சுதந்திரம் உடைய பாரதமாக இருக்க வேண்டும் என, கருதினார்.கடந்த, 1922ல், காந்தியடிகள் கைது செய்யப்பட்டபோது, நாக்பூர் நகரத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய, டாக்டர் ஹெட்கேவார் பேசுகையில், ''புண்யபுருஷர் காந்தியடிகளின் சொல் - செயல் இரண்டும் ஒன்றாக உள்ளது.
வாழ்வில், தன் உறுதி மற்றும் லட்சியத்திற்காக அனைத்தையும் துறக்க தயாராக இருக்கிறார்,'' என்றார். காந்தியடிகளை போற்றி, புகழ்ந்து பேசுவதால் மட்டும், அவரது லட்சியங்கள் பூர்த்தியடையாது. அவரது லட்சியங்களை அடைய, அவரது குணநலன்களை உணர்ந்து வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும்.

துாய எண்ணம்அன்னியர் ஆட்சியில் அடிமைப்பட்டு இருந்ததால் உருவாகியுள்ள மனநிலை எத்தகைய தீயது என, காந்தி அறிந்திருந்தார். அந்த மனநிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, உயர்ந்த சுதேசி நோக்கத்தில், பாரதத்தின் வளர்ச்சி மற்றும் செயலாக்கத்தின் ஒரு காட்சி வடிவத்தை அவர், 'ஹிந்த் ஸ்வராஜ்'ல் எழுதியுள்ளார்.அனைவரையும் திகைக்க செய்யும் மனநிலையுடன், வெல்லும் நோக்கில், உலகெங்கும் தன் செயல்முறைகளை, தத்துவங்களைக் கொண்டு சென்றார்.ஒட்டுமொத்த உலகமும், தன் அரசியல் அதிகாரத்தின் மூலம், கல்வி மற்றும் பொருளாதாரத்தை மட்டுமே நோக்கமாக செயல்பட்ட நேரத்தில், காந்தி மூலம் முன்னெடுக்கப்பட்ட முயற்சி, தற்சார்பை அடிப்படையாக கொண்டது. அது வாழ்வின் அனைத்து சிக்கல்களுக்கும் புதிய தீர்வாகவும், வெற்றிகரமான முயற்சியாகவும் அமைந்தது.
ஆனால், அடிமை மனப்பான்மையில் இருந்தவர்கள், சிறிதும் சிந்திக்காமல், மேற்கிலிருந்து வந்த செயல்முறைகளையே முக்கியமாக கருதி, தன் முன்னோரின் பழம்பெருமை மற்றும் மரபுகளை தேவையற்றது, பின்பற்ற அவசியமில்லை என, கருதிவிட்டனர். அதன் மிகப்பெரிய தாக்கம், இன்றும் காணப்படுகிறது.காந்தியின் சமகாலத்திய, பிற நாடுகளின் மகாபுருஷர்கள், பாரதத்தை மையமாகக் கொண்ட, அவரது சில கருத்துகளை ஏற்றுக்கொண்டனர்; அவர்கள் அதை, அவரவர் தேச நிர்மானத்தில் தமதாக்கிக்கொண்டனர்.காந்தியடிகள் மறைந்தபோது, ஐன்ஸ்டைன் கூறுகையில், ''இவ்வுலகில், இப்படியொரு மனிதர் வாழ்ந்து மறைந்தார் என, அடுத்த தலைமுறை நம்புவது மிகவும் கடினம்,'' என்றார்.இவ்வளவு துாய எண்ணம், ஒழுக்கத்துடன், தம் வாழ்வையே உதாரணமாக, நம்முன் வாழ்ந்து காட்டியுள்ளார்.

வழிகாட்டிகாந்தி, 1936ல், வார்தா அருகில் நடந்த சங்க முகாமுக்கு வருகை புரிந்திருந்தார். அடுத்த நாள், காந்தி தங்கியிருந்த இடத்தில், டாக்டர் ஹெட்கேவாரின் சந்திப்பு நிகழ்ந்தது.காந்தியுடன், ஒரு நீண்ட உரையாடல் மற்றும் கேள்வி - பதில் நிகழ்வு நிகழ்ந்தது. அது தற்போது, அச்சில் வெளிவந்துள்ளது.தேசப் பிரிவினையின் கொடுமை நிகழ்ந்த நாட்களில், டில்லியில் அவர் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் நடைபெற்ற ஷாகாக்களுக்கு, காந்தி வருகை புரிவதுண்டு. அவரது உரைகளும், சங்க ஷாகாக்களில் இடம்பெற்றன. அதன் தொகுப்பு விபரமாக, 1947 டிச., 27ல், 'ஹரிஜன்' பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
சங்க ஸ்வயம் சேவகர்களின் ஒழுக்கம் மற்றும் இயல்பான ஜாதிபேதமற்ற தன்மை பார்த்து, காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.'ஸ்வ' என்னும், சுயம் என்ற அடிப்படையில், முழுமையான பாரதத்தை கனவு காணும், சமூக ஒற்றுமை, சம தர்மத்தின் முழு ஆதரவாளராக, தன் கருத்துகளுக்கு, தானே உதாரணமாக விளங்கக்கூடிய, அனைவருக்கும் வழிகாட்டியாக, காந்தியை நாம் அனைவரும் பார்க்க வேண்டும்;புரிந்து கொண்டு, நம் செயல்களில் கடைப்பிடிக்க வேண்டும்.அவரது நற்பண்புகளின் காரணமாகவே, அவரிடம் சிறிது கருத்து வேறுபாடு உள்ள நபர்கள் கூட, அவரை சிரத்தையுடன் நோக்கினர்.ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில், தினமும் காலை, ஒரு துதிமூலம் தேசத்தின் மஹாபுருஷர்களை நினைவு கூறும் முறை, சங்கம் துவங்கிய காலத்திலிருந்தே நிகழ்ந்து வருகிறது.கடந்த, 1963ல், இது திருத்தி எழுதப்பட்டபோது, அதில் சில புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டன.அந்த நேரத்தில், வணக்கத்துக்குரிய காந்தி மறைந்து விட்டார்.

அவருடைய பெயரும், அதில் சேர்க்கப்பட்டது. தற்காலத்தில் அதை, 'ஏகாத்மதா ஸ்தோத்திரம்' என்கிறோம். சங்க ஸ்வயம் சேவகர்கள், தினமும் காலையில், காந்தி பெயரை உச்சரித்தபடியே, உயர்ந்த நற்பண்புகளை கொண்ட அவரது வாழ்வை நினைவு கூர்கின்றனர். காந்தியின், 150வது பிறந்த தினத்தில், அவரை நினைவுகூர்வதுடன், நாம் அனைவரும், ஓர் உறுதி ஏற்க வேண்டும்.அதாவது, அவரது துாய்மை, தியாகம் பொருந்திய சமநோக்கு கொண்ட வாழ்க்கையை, நாமும் பின்பற்ற வேண்டும். பாரதத்தை, 'உலகின் குரு'வாக்குவற்காக, நம்மை அர்ப்பணித்து, தியாக உணர்வை கொண்டு வருவோம்.

டாக்டர் மோகன் பாகவத்
அகில பாரத தலைவர் ஆர்.எஸ்.எஸ்.,

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement