LOGIN
dinamalar telegram
Advertisement

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை

Share
மதுரை : துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது.துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே 22ல் நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. 13 பேர் பலியாகினர்.


'இது தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்குப் பதிய உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கலாகின. விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி 2018 ஆக.14 ல் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சி.பி.ஐ., இயக்குனர் தாக்கல் செய்த மனுவில், 'விசாரணையை 4 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணையை முடிக்க அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்' என தெரிவித்தார்.ஜூன் 27 ல் விசாரித்த நீதிபதிகள், 'விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும். அதன் நிலை குறித்து சி.பி.ஐ.,தரப்பில் செப்டம்பரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு நேற்று விசாரித்தது.

சி.பி.ஐ., தரப்பில், 'விசாரணை முடியும் நிலையில் உள்ளது. மேலும் 2 மாதங்கள் அவகாசம் தேவை' என தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதிகள், 'அறிக்கையை படித்துப் பார்க்க வேண்டும். அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை அக்.3க்கு ஒத்திவைக்கப் படுகிறது' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement