Advertisement

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்

சென்னை: நீட் தேர்வில் மாணவர் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மறுஆய்வு செய்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.சென்னையை சேர்ந்த உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாக புகார் எழுந்தது. மாணவரின் ஹால் டிக்கெட் புகைப்படமும், தற்போதைய புகைப்படமும் மாறுபட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த புகார் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறியது:

சென்னையை சேர்ந்த உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் புகைப்படமும், தற்போதைய புகைப்படத்தின் தோற்றமும் வேறுபாடாக உள்ளதாகவும் புகாரில் கூறப்படுகிறது. இது குறித்து 4 பேர் கொண்ட குழு விசாரித்து, அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மறுஆய்வு செய்ய சுற்றறிக்கை அனுப்பும். ஆள்மாறாட்டத்தை தடுக்க எதிர்காலத்தில் புகைப்படத்துடன் கைரேகையும் பெறப்படும்.

புகார் வந்த நாள் முதல் மாணவர் கல்லூரிக்கு வரவில்லை. மன உளைச்சல் காரணமாக தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இவர், 12ம் வகுப்பு முடித்து 2 வருடங்கள் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். 3வது முறையாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
அந்த தேர்வில் 385 மதிப்பெண் எடுத்துள்ளார். தேர்வு எழுதியது யார் என தெரியவில்லை. நீட் தேர்வு எழுதியவர் ஒருவர், எம்.பி.பி.எஸ்., படிப்பது ஒருவர் என தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நாராயண பாபு தெரிவித்தார்.
ஆள் மாறாட்டம் செய்து மருத்துவர் படிப்பில் சேர்ந்ததாக எழுந்த புகார், மாணவர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    இவர் இட ஒதுக்கீட்டில் சேர்ந்து இருக்கிறார். இவரின் இந்த செயலால் வேறு ஒரு தகுதியான தாழ்த்தப்பட்ட மாணவர்க்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இவருடைய தந்தையார் சென்னையில் அரசு மருத்துவராக உள்ளார். அவருடைய பின்னணியையும் விசாரிக்கவேண்டும். அவர் உண்மையிலேயே S C இனத்தை சார்ந்தவரா என்று கண்டறியவேண்டும். இந்த ஆள் மாறாட்டம் பற்றி ஏன் நம்முடைய வசூல் ராஜா மருத்துவர் இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லை.

  • நக்கல் -

    தமிழனுக்கு ஆதரவாக ஒரு டுமீளர்கள் கூட்டம் கிளம்பும்...

  • மதுவந்தி -

    படிக்காமல் ஜெயிக்க என்னமா போட்டி போடறாங்க. கண்டு பிடிக்கலைனா எத்தனை நோயாளிகளை Postmortem பண்ணி இருப்பான்..

  • முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்

    கமல் ஹாசன்.. கோவிச்சிக்க போறாம.. பார்துக்குங்க....

    • Robins - Chennai,இந்தியா

      ஏன் முன்னா பாய் கோவிச்சக்க மாட்டாரா Mr . முல்லா. ?

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    அப்படி என்னத்த கடும் நடவடிக்கை எடுக்க்ப் போறீங்க...??? மிஞ்சிப் போனால் ஏழு வருஷம்....

Advertisement