Advertisement

வெளிநாட்டு வாசம்: இந்தியர்கள் முதலிடம்

புதுடில்லி : வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் 17.5 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.
சொந்த நாடுகளை விட்டு இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வசிக்கும் நாட்டினர் குறித்த புள்ளிவிபர பட்டியலை ஐ.நா., சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில், உலகம் முழுவதும் சுமார் 272 மில்லியன் பேர் சொந்த நாடுகளை விட்டு, வெளிநாடுகளில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது. இவர்களில் 17.5 மில்லியன் பேர் இந்தியர்கள். அதாவது மொத்த இடம் பெயர்ந்த நாட்டினரில் சுமார் 6 சதவீதம்.

அதிகம் இடம்பெயர்ந்த நாட்டினரின் பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து மெக்சிகோ (11.8 மில்லியன்), சீனா (10.7 மில்லியன்) மற்றும் ரஷ்யா (10.5 மில்லியன்) நாட்டினர் இடம்பெற்றுள்ளனர்.
2010 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சொந்த நாடுகளை விட்டு இடம்பெயர்வர்களின் எண்ணிக்கை 2019 ல் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. அகதிகளாகவும், வேலைவாய்ப்பிற்காகவும் இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
2010 முதல் 2017 வரை மட்டும் உலக அளவில் 13 மில்லியன் பேர் தாய்நாட்டை விட்டு, பிற நாடுகளில் குடியேறி இருக்கின்றனர். அதிகமானவர்கள் தேடி செல்லும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் ஜெர்மனி 2வது இடத்திலும், சவுதி அரேபியா 3வது இடத்திலும் உள்ளன.
சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வாழும் நாடாக அமெரிக்க உள்ளதாக ஐ.நா., புள்ளிவிபரம் கூறுகிறது. அதாவது அமெரிக்காவில் வசிப்பவர்களில் சுமார் 13 மில்லியன் பேர் வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள்.

அதே சமயம் பிற நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5.1 மில்லியனாக உள்ளது. இவர்களில் 4 சதவீதம் பேர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • சீனு, கூடுவாஞ்சேரி - ,

  திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் அவர்கள் இருக்க விரும்பவில்லை. போராட மனம் இடம் கொடுக்க மறுக்கிறது. தன் திறமையை நம்பி சிறிது துணிவுடன் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நிலைத்து விடுகின்றனர். அங்கும் தங்களது கலாசாரத்தை தீவிரமாக பின் பற்றுகின்றனர். அமெரிக்காவில் விரைவில் திருஅல்லிக்கேணி போல சிறிய ஊர் விரைவில் வருவது இவர்களால் சாத்தியமே. இந்த தீயசக்திகள் இருக்கும் வரை தமிழகத்தில் திறமைக்கு வேலையில்லை. பஸ் டிரைவர் கண்டக்டர் அப்பாயின்ட் முதல் குருப் ஒன் வரை எல்லாவற்றிலும் ஊழலென்றால் எப்படி தமிழகம் முன்னேறும்.

 • blocked user - blocked,மயோட்

  திராவிட மதத்தினரின் உருட்டல் மிரட்டல், இட ஒதுக்கீடு மற்றும் திறமையுள்ளவர்கள் அதிகம் சம்பாதித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற உந்துதல் இந்தியர்கள் பலரை புலம் பெயர வைத்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

 • தீதும் நன்றும் பிறர் தர வாரா - Perth,ஆஸ்திரேலியா

  தாய் நாட்டை விட்டு போவது எளிது இல்லை.. வாழ்க்கை தரம் உயரும் என்று வெளியே சென்று உழைக்க வேண்டியதாகிறது.. அனைவரும் வெளியே சுற்றுலா சென்றால், நம் வெளிநாட்டு வாழ் நண்பர்கள் சொந்த ஊருக்கே வர விரும்புகிறார்கள்..

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  நெருக்காலத்துலேந்து போயிருக்காங்களேபல தமிழர்கள் மோடியை சொல்லலேன்னா ஜீரணம் ஆவாதுங்க பலருக்கு படிச்சுட்டுஇங்கே வேலைகிடைக்காமல்தான் அங்கேபோறாங்க அங்கேயே செட்டில் ஆயுடுறாங்க அங்கேயே பிள்ளைகளைப்பெற்று வாழ்ந்துமுடிச்ச தமிழர்கள் இந்தியர்கள் பலருண்டு

 • spr - chennai,இந்தியா

  "ஆயில் முதல் விமானம் வரை, அரசு நடத்தாமல் தனியாருக்கு கொடுக்குமாம். தனி மனிதன் தைரியமாக தொழில் தொடங்கி பிழைக்க வேண்டுமாம்." திறமையுள்ளவர்கள் வேண்டுவது இதைத்தானே. நாமும் முன்னேறி, நாலுபேருக்கு வேலை வாய்ப்பளிக்க தக்க வழியென்று சொல்கிறோம். எத்தனை நாட்கள் ஒருவருக்கு அடிமையாக கூலி வேலை செய்வது? ஒவ்வொருவரும் அம்பானி போல ஆகமுடியாவிட்டாலும், ராம்ராஜ் ஆச்சி மசாலா நிறுவனர் திரு பத்மசிங் ஐசக் சொல்வது போல "நான் ஒரு தெளிவான முடிவை எடுத்துத்தான் இந்த தொழிலுக்குள் வந்தேன். ஆனால் ஆறேழு வருடங்கள் கடுமையாகப் போராடினேன். குறிப்பாக நான் எங்கு செல்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை கனவு கண்டேன். உணவுத்துறையில் இதைச் செய்ய வேண்டும் என கனவு கண்டேன். அதற்காகப் போராடினேன். அதனால் வெற்றியடைந்தேன். நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தேன்." ஒவ்வொரு இளைஞனும் செய்வதற்கு அரசு ஊக்கம் கொடுக்க வேண்டும் அரசு ஆதாயம் பார்க்கக்கூடாத அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், பாதுகாப்பு நீதி மற்றும் கட்டமைப்பு வசதி போன்றவைகளை அளிக்க செலவு செய்தால் போதும் மற்றவை எல்லாம் தனியார் வசம் இருப்பது நல்லது மக்களே கூட்டுறவு முறையில் விவசாயம் சந்தைப்படுத்துதல் செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும் அதுவே நாட்டுக்கு நல்லது

Advertisement