Advertisement

எல்லைகள் பற்றி வரலாற்று ஆய்விற்கு அனுமதி

புதுடில்லி : இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.
இந்திய எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்வது தொடர்பாக இந்திய வரலாற்று ஆய்வு கழகம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆவண காப்பக இயக்குனரகம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் நேற்று (செப்.,17) ஆலோசனை நடத்தினார்.
இதில் எல்லைகள் குறித்த வரலாறுகளை ஆய்வு செய்வது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் இன்று (செப்.,18) அனுமதி அளித்துள்ளார்.

எவ்வாறு எல்லைகள் வகுக்கப்பட்டது, எல்லைகள் மாற்றப்பட்டது, இதில் பாதுகாப்பு படையினரின் பங்கு, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பங்கு, அவர்களின் கலாச்சாரம், சமூக - பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கி, பல கோணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. எல்லைகள் தொடர்பான வரலாற்று ஆய்வுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்விற்கு பிறகு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, திபெத், இலங்கை ஆகியவற்றுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண வழி கிடைக்கும் என இந்திய அரசு கருதுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • ashak - jubail,சவுதி அரேபியா

    ரொம்ப முக்கியம்

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    இதுல நம்ம தில்லு முல்லுக் கழக ஆளுங்க அவ்ங்க ஆஸ்தான லயோலா நீல்சன் போன்ற கம்பெனிகளை வைத்து ஆய்வு செய்தால் என்ன சொல்லுவாங்க தெரியுமே....???? இந்தியாவின் நெல்லை வடக்கே டில்லியிலிருந்து தெற்கே திருப்பதியிலும்.... கிழக்கே ஒதிசாவிலிருந்து மேற்கே மகாராஷ்ட்ரா வரையிலும் மட்டுமே இந்தியாவோட எல்லைகள்...ன்னு முடிவே பண்ணியிருப்பாங்க....

  • Sandru - Chennai,இந்தியா

    நாடு பொருளாதார சிக்கலை சந்திக்கும் நேரத்தில் இவர்கள் பிடில் வாசித்து கொண்டு இருக்கிறார்கள். கையாலாகாத ஆட்சியாளர்கள்.

    • Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

      பிரியுதப்பா,உனுக்கு இன்னும் சம்பளம் வரல,ஷர்ஸ் லாஸ் ,mutualfund போச்சி ,கார் வாங்க முடியல ,குடும்பத்தோட ரோட்ல பிச்சை எடுக்கற ,பாவம்

  • Jaya Ram - madurai,இந்தியா

    இந்தியா என்ற நாடு உருவானதே 1947 க்கு பின்னரே அதுவும் ஆங்கிலேயர்களால் பாக்கிஸ்தான் , காஷமீர் போன்ற நாடுகள் பிரிக்கப்பட்ட பின் எந்த எல்லையும் அளவாக வைத்து இந்தியா உருவாக்கப்படவில்லை சுதந்திரத்திற்காக இணைந்து போராடிய பகுதிகளை எல்லாம் இந்தியா என்று நேருவும் படேலும் நினைத்துக்கொண்டனர் அதில் பலநாடுகள் உள்ளன என்றும் பலவிதமான மொழி இனம் உள்ளன என்றும் அவர்களுக்கு தெரியும் இருந்தும் நாடுபிடிக்கும் ஆசையினால் காந்தியின் உறுதிமொழியினாலும் அங்கங்கே இருந்த காங்கிரெஸ்ஸார் செய்த துரோகத்தினாலும் மைசூர், ஆந்திராவின் ஒருபகுதி, தமிழ்நாடு போன்றவையும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன அப்போது இப்போ இந்தியா என்று பேசும் மோடி அமிட்சா போன்ற ஆட்கள் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் தமிழ்நாடு இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்காது ஏனென்றால் மொழி , உடை , கலாச்சாரம் , உணவு , சீதோஷ்ணநிலை போன்ற அனைத்திலும் வித்தியாசம் அன்றைய காலகட்டத்தில் நேருவிற்கும் , படேலுக்கு இருக்கும் மக்கள் தொகைக்கு இடம் தேவைப்படும் என்று கருதியே இந்த இடங்களையெல்லாம் காந்தி உறுதிமொழி என்றபெயரில் ஆக்ரமித்தனர் காந்தியினை நம்பினான் தமிழன் அடிமையானான் இந்தியாவிற்கு

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    சோழமன்னர்கள் படையெடுத்து கைப்பற்றிய பகுதியெல்லாம் இந்தியாவுடன் சேர்க்கப்படுமா ?..

Advertisement