Advertisement

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 15 செ.மீ., திருச்சி புல்லம்பாடி, அரியலூரின் ஜெயங்கொண்டத்தில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    நாசமாக்கியாச்சு இதற்க்கு mainkaaranam 1சாராயம் 2டிவிசீரியல்கள் 3 கேவலமான நாகரீகம் என்றபெயரில் பெண்கள் உடுத்தும் உடைகள் . 4ஏவாளும் முதுகுல துணியே வச்சு தைப்பது இல்லீங்க பின்கழுத்து லோ கட் ஆயிச்சு பிறகு முன்னாடி மாட்டும் மூடிண்டு வந்த ஆடுறாளுக ஆபாசம் 5மாடர்ன் என்றபெயரில் அவ்ளோ கேவலமா இருக்காளுக 7அதுவும் +2முடிச்சால் போதும் கல்லூரிக்கு போடும் உடைகள் அவ்ளோ அசிங்கம் ஆபாசம் . 8கிழவிகளும் கூட சல்வார்கமீஸ் தான் மேல துப்பட்டா கிடையாது அவ்ளோ அசிங்கமா இருக்கு ,9 ஹிந்தி கூடாதுன்னா ஹிந்திக்காரங்க டிரஸ் என்னாத்துக்கு ?????????10நர்த் போனால் முழிக்கறாங்க பிறகு சமாளிச்சு பேச ஆரம்பிக்குறாங்க ஹிந்திபடிச்சால் என்ன செத்தா போயிடுவான் தமிழன்களெல்லாம் இங்கே வியாபாரியை வரும் வடநாட்டான் நம்ம பாஷைகற்ரு ஜெயிக்கும் பொது நம்மவர்கள் படிச்சால் என்ன?

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    எத்தினை மழை வெள்ளம் வந்தாலும் எங்கள் பொதுப்பணித்துறை வந்த அனைத்து நீரையும் உடனடியாக கடலுக்கு சேர்ப்பதில் வல்லவர்கள் அப்போதுதான் மக்கள் துன்பத்தில் செய்வது அறியாது துடிப்பார்கள், இதற்க்கு சாட்சி தனியார் ஊடகங்கள் மற்றும் தினமலர் நேற்றைய செய்தி, இதை ஊர்ஜிதப்படுத்த முதல்வரின் எச்சரிக்கை. வாழ்க ஜனநாயகம், வரப்போவதே இல்லை எந்த மாற்றமும்,

Advertisement