Advertisement

தரமில்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை; நான்கே மாதங்களில் மீண்டும் டமார்

வீரபாண்டி: புதிய தடுப்பணை கட்டப்பட்ட, நான்கே மாதங்களில் மீண்டும் உடைந்தது.
சேலம், சித்தர்கோவில் அடுத்த, லகூவம்பட்டி ஓடையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, கடந்த ஜனவரியில், 1.37 லட்சம் ரூபாயில் முன் தடுப்பணை கட்டப்பட்டது. கஞ்சமலையில் இருந்து வழியும் மழைநீர், லகூவம்பட்டி ஏரியில் கலக்கும் வகையில் வெட்டப்பட்டுள்ள ஓடை கால்வாய் நடுவே, கருங்கற்களை கொண்டு கட்டப்பட்ட தடுப்பணை, கடந்த ஏப்ரலில் பெய்த கனமழையில் அடித்து செல்லப்பட்டது. இதனால், மழைநீர் ஓடையில் நிற்காமல் ஓடியதால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவில்லை. முருங்கப்பட்டி பஞ்., சார்பில் அதே இடத்தில் கடந்த மே மாதம் மீண்டும் தடுப்பணை கட்டப்பட்டது. இதுவும், கடந்த வாரம் பெய்த கனமழையில், தடுப்பணையின் கம்பி வேலி விலகி, கருங்கற்கள் உருண்டு அணை உடைந்துள்ளது. 'இரண்டு முறையும் தரமில்லாமல் தடுப்பணை கட்டியவர்கள், அதை ஆய்வு செய்து சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement