Advertisement

துப்புரவு ஊழியர் குடும்பத்தினர் தற்கொலை முயற்சி

சேலம்: இறந்த துப்புரவு ஊழியருக்கான பணப்பலன், வாரிசு வேலை தராமல் மாநகராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக கூறி, அவரது குடும்பத்தார், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
சேலம், கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்தவர் செல்வமேரி, 45. கணவனை இழந்த இவர், தன் மகள்கள் ஞானம்மாள், 32, பிரியா, 30, மஞ்சு,25, தங்கை மகள் சுகுணா,30, பிரியாவின் கணவர் தங்கமணி,34 ஆகியோருடன், நேற்று, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது, நுழைவு வாயில் முன், ஆறு பேரும், தங்கள் மீது, மண்ணெண்ணையை ஊற்றிகொள்ள முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடுத்து நிறுத்தினர். பின், அவர்களிடம் விசாரணை நடந்தது.

செல்வமேரி கூறியதாவது: மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலத்தில், துப்புரவு ஊழியராக பணியாற்றிய கணவர் சேட்டு, 50, கடந்த, 2014ல், உடல்நல குறைவால் இறந்துவிட்டார். அவருக்கான பணப்பலன் இதுவரை, கிடைக்கவில்லை. வாரிசு வேலையும் வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலைக் கழிக்கிறது. இது தொடர்பாக, பலமுறை மனு கொடுத்து, ஆறு ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்கள் பிரச்னையை, மாவட்ட நிர்வாகத்துக்கு எடுத்து சென்று, தீர்வு பெறவே, தற்கொலை முடிவுக்கு வந்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement