Advertisement

ஓடும் பஸ்சில் 5.5 பவுன் திருட்டு

சேலம்: சேலத்தில், ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்டது. சேலம், போடிநாயக்கன்பட்டி, திருஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார், 35; பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியர். மனைவி சுசித்ரா, 32, உறவினர்கள் மூவருடன், நேற்று முன்தினம் மாலை, நான்கு ரோட்டில் உள்ள நகை கடைக்கு சென்றார். அங்கு, 5.5 பவுன் தங்க சங்கிலியை வாங்கிக் கொண்டு, போடிநாயக்கன்பட்டி செல்ல, புதிய பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ்சில் சென்றனர். அங்கு வந்து இறங்கிய நிலையில், பையில் வைத்திருந்த, 5.5 பவுன் சங்கிலியை காணவில்லை. பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement