Advertisement

சிறுமியை கடத்திய வாலிபர் மீது வழக்கு

சேலம்: வீராணத்தில் தனியார் ஆலையில் பணிபுரிந்த சிறுமியை, கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சேலம், வீராணத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, ஒன்பதாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதால், அதே பகுதியில் உள்ள, தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த, 14 காலை, 8:30 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை, அதே மன்னார்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ், 22, கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement