Advertisement

திருட்டு, வழிப்பறி: எட்டு பேர் கைது

சேலம்: சேலத்தில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், குகை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதீப்குமார்,35. இவர், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, கன்னங்குறிச்சி மூக்கனேரி பூங்கா அருகே நடந்து சென்றபோது, சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த தீனதயாளன், 23, கத்தியை காட்டி மிரட்டி, 600 ரூபாயை பறித்து சென்றார். போலீசார் விசாரித்து, தீனதயாளனை கைது செய்தனர்.


* பழைய சூரமங்கலத்தை சேர்ந்தவர் பத்மநாபன், 31. இவர், நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு, குரங்குசாவடி பெருமாள் மலை சாலையில் நடந்து சென்றார். அப்போது, டாட்டா காலனியை சேர்ந்த வசந்த், 29, பத்மநாபனிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன், 10 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டார். சூரமங்கலம் போலீசார், வசந்தை கைது செய்து, பணம், மொபைல் போனை மீட்டனர்.


* சேலம், மூங்கப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்,24. நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு அரசு மருத்துவக்கல்லூரி பின் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டபோது, அங்கு வந்த மூன்று பேர், அருணை மிரட்டி, மொபைல் போன், 500 ரூபாயை பறித்துக் கொண்டனர். விசாரணை நடத்திய இரும்பாலை போலீசார், வட்டமுத்தாம்பட்டியை சேர்ந்த, 19 வயதுடைய இளைஞர்கள் மூன்று பேரை கைது செய்து, மொபைல் போன், பணத்தை மீட்டனர்.

* கருப்பூர், இந்திராநகரை சேர்ந்தவர் பாலாமணி, 32. இவர், கடந்த, ஆக.,31ல் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து, டி.வி., நான்கு பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கருப்பூர் போலீசார் விசாரித்து, களரம்பட்டியை சேர்ந்த விஜய், 25, தாதகாப்பட்டியை சேர்ந்த வேலாயுதம், 36, சரவணன்,24, ஆகியோரை கைது செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement