Advertisement

பா.ஜ., பிரமுகர் கொலை: ஏற்காடு வாலிபர் கைது

Share
ஏற்காடு: ஏற்காட்டில், பா.ஜ., பிரமுகரை கொலை செய்த வழக்கில், வாலிபர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, கொளகூரை சேர்ந்தவர் சின்ராஜ், 45; பா.ஜ., ஒன்றிய துணைத் தலைவர். நிலத்தகராறில், நேற்று முன்தினம் மதியம், மணிவண்ணன், 25, என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மணிவண்ணன் தலைமறைவானார். இந்த கொலை குறித்து விசாரிக்க, ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வனப்பகுதியில் சுற்றி திரிந்த மணிகண்டன், நாகலூரில் சுற்றி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சேலம் செல்வதற்காக பஸ் ஏற, நாகலூரில் காத்திருந்த மணிவண்ணனை நேற்று காலை, 11:00 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement