Advertisement

ரயில் தண்டவாளம் அருகே முதியவர் சடலம் மீட்பு

சங்ககிரி: சங்ககிரி, ரயில் தண்டவாளம் அருகே, காயத்துடன் இறந்து கிடந்த முதியவர் சடலம் மீட்கப்பட்டது. சங்ககிரி, ரயில்வே ஸ்டேஷன் அருகே, மோடிக்காடு என்ற இடத்தில் தண்டவாளம் அருகே, தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன், 60, வயது மதிக்கத்தக்க, பெயர், விலாசம் தெரியாத ஆண் சடலம் நேற்று கிடந்தது. இது குறித்து, அப்பகுதி மக்கள், ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த, ஈரோடு ரயில்வே போலீசார், பிரேதத்தை கைப்பற்றினர். மேலும், ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து உடலை போட்டு சென்றுள்ளனரா என்ற கோணத்தில், விசாரித்து வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement