Advertisement

மகளிர் குழுவில் ரூ.10 லட்சம் மோசடி: பெண்கள் புகார்

சேலம்: சேலம், கென்னடி நகர், 4வது கிராசை சேர்ந்த நர்மதா, 42, ஜோதி, 40, அனுராதா, 43, லதா,43, பூங்கொடி,50, ஆகியோர், நேற்று, கலெக்டர் ராமனிடம் மனு அளித்தனர். அதன்பின், அவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் வசிக்கும், மகளிர்சுய உதவிக்குழு தலைவி, எங்களுடைய பெயரில், 10 லட்ச ரூபாய் கடன் பெற்று, நான்கு மாதமாக, ஒரு தவணை கூட செலுத்தவில்லை. கேட்டால், அடியாட்களை வைத்து, மிரட்டல் விடுக்கிறார். அதற்கு, அவரது கணவரும் உடந்தை. இதுகுறித்து, சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்களை போல, பல பெண்கள் பெயரில் கடன் பெற்று, மோசடி நடந்துள்ளது. எனவே, உரிய விசாரணை நடத்தி, தம்பதி மீது, வழக்கு பதிந்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement