Advertisement

பெண்களிடம் சங்கிலி பறிப்பு: 2 பேர் குண்டாசில் கைது

சேலம்: சேலம், சின்னதிருப்பதி, மூக்கனேரி அடிக்கரையை சேர்ந்தவர்கள் சதீஷ், 29, பிரசாந்த், 21. இரண்டு பேரும் சேலத்தில் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது, கன்னங்குறிச்சி, வீராணம் போலீஸ் ஸ்டேஷன்களில் சங்கிலி பறிப்பு, கார் திருட்டு, மிரட்டி பணம் பறித்தல் என, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர்கள் செயல்பாடு இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தில் அவர்களை கைது செய்ய, கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கவேல், குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் ஆகியோர் பரிந்துரைத்தனர். அதையேற்று, இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். சேலம் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம், இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement