Advertisement

டவுட் தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ: நான், ஈ.வெ.ரா.,வின் பேரன்; அண்ணாதுரையின் வார்ப்பு; கருணாநிதியிடம், பல ஆண்டுகள் பயிற்சி பெற்றவன். பொது வாழ்வில் நான் சாதித்ததைப் போல, வேறு யாரும் சாதித்தது இல்லை. இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும், யாரும் என்னைப் போல சாதிக்க முடியாது.

டவுட் தனபாலு: தி.மு.க., தலைவர், ஸ்டாலினை மேடையில் வைத்தபடி, நீங்கள் பேசிய பேச்சு, உங்கள் தைரியத்தை காட்டுகிறது. வாழ்த்துகள். 'தமிழகத்தையும், தமிழ் மொழியையும் காத்தது, தி.மு.க., தான்' என, ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நீங்களோ, 'என்னைப் போல யாரும் சாதிக்க முடியாது' என்கிறீர்கள். அப்போ, தமிழகத்தில் உண்மையாக சாதித்தது யார் தான் என்பதே என், 'டவுட்!'


தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்: தமிழகத்தில், அக்டோபர் முதல், டிசம்பர் வரையிலான, வட கிழக்கு பருவ மழை காலத்தை எதிர்கொள்ள, எங்கள் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக, மத்திய அரசிடம், ௩,௦௦௦ கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.


டவுட் தனபாலு: அவ்வப்போது பெய்யும் மழைக்கே, மாநிலத்தின் சாலைகள், தெருக்கள், வெள்ளக் காடாகி வருகின்றன. இதில், மூன்று மாதம் பெய்யும் மழையை எதிர்கொள்ள நீங்கள் தயாராகி விட்டதாக கூறுகிறீர்கள். உங்களின், 'உரிய' நடவடிக்கை என்ன, என்பதை விளக்கினால் நல்லது. சரி, தென் மேற்கு பருவ மழை பெய்து, காவிரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறதே, அதை தடுக்க, என்ன உரிய நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதே என் 'டவுட்!'


தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: தமிழகமே பொறாமைப்படும் அளவுக்கு, ஏன், இந்தியாவே பொறாமைப்படும் அளவுக்கு சாதனைகள் செய்த ஆட்சி, கருணாநிதி தலைமையில் இருந்த, தி.மு.க., ஆட்சி. எங்கள் சாதனைகளை முறியடிக்க, இன்னொருவர் பிறந்து வர வேண்டும் என சொல்ல மாட்டேன். எங்கள் சாதனைகளை, நாங்களே தான் முறியடிப்போம்.


டவுட் தனபாலு: நீங்கள் சொல்வது போல, இந்தியாவே பொறாமைப்படும் அளவுக்கு ஆட்சி செய்தது, தி.மு.க., தான் என்றால், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., அரசுகள், எட்டு முறை தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததே... அது, எதனால் என்ற என், 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • karutthu - nainital,இந்தியா

    தி மு க வின் ஆட்சியை சர்க்காரியா கமிஷன் அறிக்கைதான் அழகாக கூறிவிட்டதே தவிர விஞ்ஞான பூர்வ ஊழல் என சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டதே பிறகென்ன

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அம்மாவை அன்பு சகோதரி என்று ஒட்டிக்கொண்டது, இன்று ஸ்டாலினின் கொள்ளுப்பேரனுக்குக்கூட சாமரம் வீசி, ரா . ச . எம் பி வாங்கியது. எதை சொல்வது? இன்னும் உள்ள காலத்தில் எத்தனை ‘சாதனைகள்’ நிகழ்த்தப் போகிறாரோ ?

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    முத்திடுச்சி...

  • theruvasagan -

    எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம். அப்ப 2ஜி யில ஆட்டையபோட்ட 1.76 லட்சம் கோடிய அடுத்த தடவை டபுளாக்க திட்டமா. நாடு தாங்காது உத்தமர்களா.

  • theruvasagan -

    பொதுவாழ்வில் என்னப் போல யாரும் சாதிக்கமுடியாது. நிஜம்தான். மானங்கெட்டு மதி கெட்ட இப்படி ஈனமான பொழப்பை நடத்தணும்னு கேடு கெட்டவன் கூட நினைக்கமாட்டான்

Advertisement