Advertisement

டவுட் தனபாலு

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்: அனைத்து பள்ளிகளிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இதனால், மாணவர்கள், படிப்பை பாதியிலேயே கைவிடுவர் எனக் கூறுவதை ஏற்க முடியாது.

டவுட் தனபாலு: பின்லாந்து நாட்டுக்கு சென்று வந்த நீங்க, அங்குள்ள கல்வி முறையை தமிழகத்திலும் பின்பற்றப் போவதாக சொன்னீங்க... ஆனா, பின்லாந்தில், குழந்தைகள், 7 வயதில் தான் பள்ளிக்கு செல்கின்றனராமே... பொதுத் தேர்வு, நுழைவுத் தேர்வு என, பீதியை கிளப்புவதை பார்த்தால், நிஜமாவே, நீங்க பின்லாந்து நாட்டுக்கு தான் போனீங்களா என்ற, 'டவுட்' வருதே...!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழகத்தில், ஒரு பக்கம் கலாசார தாக்குதலும், மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது. நாம் நடத்தும் போராட்டங்களின் முன்னணி போர் வாளாக, வைகோ தொடர்ந்து செயல்படுவார்.

டவுட் தனபாலு: அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் சார்; உடல் நலம் குன்றியிருந்த உங்கள் தந்தையை பார்க்க, காவேரி மருத்துவமனைக்கு வந்த வைகோ மீது தாக்குதல் நடத்தப்பட்டதே... அது, கலாசார தாக்குதலா, ரசாயனா தாக்குதலா என்ற, 'டவுட்'டுக்கு விடை கிடைக்குமா?

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: இன்றைய இளைஞர்கள் தான், நாளைய தலைவர்கள். எனவே, தி.மு.க.,வில், இளைஞரணியை பலப்படுத்துவது அவசியம்.

டவுட் தனபாலு: தி.மு.க.,வில், இன்று இளைஞரணி செயலராக இருக்கும் நீங்கள் தான், நாளைக்கு கட்சிக்கு தலைவராக போகிறீர்கள் என்பதை, தொண்டர்களுக்கு மறைமுகமாக சொல்கிறீர்களோ என, 'டவுட்' வருதே...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    இன்று இளைஞரணி செயலராக இருக்கும் நீங்கள் தான், நாளைக்கு கட்சிக்கு தலைவராக போகிறீர்கள் என்பதை, தொண்டர்களுக்கு மறைமுகமாக சொல்கிறீர்களோ என, 'டவுட்' வருதே...... இதில் மறைமுகம் என்ன....??? அவுரு நேரடியாத் தானே சொல்றாரு.... சொரணை கெட்ட உ.பிஸ்க்குத் தான் புத்தி வரணும்....

  • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

    5 மற்றும் 8 வடு வகுப்பில் தேர்வு முன்பு இருந்தது. தேர்வு என்பது சொல்லித்தந்த பாடத்தை மாணவர்கள் புரிந்து/அறிந்தார்களா என்று பார்க்கும் எடை கோல் . இதுவே ஆசிரியர்கள் கற்று தரும் திறமையின் மதிப்பீடு. தேர்வு இல்லையென்றால், ஆசிரியர்கள் மெத்தனமாக இருக்க வாய்ப்பு உண்டு. எல்லா மாணவர்களும் தேர்வில் வெற்றி அடைய வைக்க வேண்டிய பொறுப்பை ஆசிரியர்களிடம் கொடுங்கள். பின் தேர்வு பற்றிய சிந்தனையே வேண்டாம். அடுத்த வகுப்பிற்கு தயாரில்லாத மாணவனை, தயாரான மாணவனுடன் சேர்த்து எப்படி படம் சொல்லித்தரமுடியும். TEACHING IS PROCESS OF MOVING FROM KNOWN TO UNKNOWN . KNOWN SHOULD NOT BE COMPROMISED .

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பின்லாந்துக்கு சும்மா சுற்றி[பார்க்கப்போனால் அதையெல்லாம் இங்கு கொண்டுவருவேன் என்று சொன்னேனா?

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    வைகோவை வெறுன அடிச்சதனால, அது கலாச்சாரட் தாக்குதல்தான் ....... ஆசிட் அடிச்சிருந்தாங்கனாக்கத்தான் அது ரசாயனத் தாக்குதல் ...........

Advertisement