Advertisement

ஓட்டுனரில்லா வாடகை வேன்!

ஏற்கனவே அமெரிக்காவில் சில சிறு நகர்களில் தானோட்டி கார்கள் வாடகைக்கு வெள்ளோட்டம் போய்க்கொண்டிருக்கின்றன. சமீபத்தில், நியூயார்க் நகரில் தானோட்டி வேன்கள் சேவையை 'ஆப்டிமஸ் ரைடிங்' துவக்கி இருக்கிறது.

புரூக்ளின் நேவி யார்டு தொழிற்பேட்டை வளாக பணியாளர்கள் ஆப்டிமசின் தானோட்டி வேன்களில் இலவசமாக பயணிக்கலாம். நியூயார்க்கின் படகுத்துறையிலிருந்து, தொழிற்பேட்டை வளாக நுழைவாயில் வரை, ஆப்டிமஸ் வேன்கள் வருவதும் போவதுமாக இருக்கும்.

மாதத்திற்கு, 16 ஆயிரம் பேர் ஆப்டிமஸ் தானோட்டி வேனில் பயணிப்பர்.தானோட்டி பயணிக்கும் பாதைகள் முழுவதும் முப்பரிமாண வரைபடமாக, ஆப்டிமசின் செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள கணினியில் பதியப்பட்டிருக்கிறது.

அதன் புத்திசாலி கேமராக்களும், இதர உணரிகளும் பாதையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து, புதுப்பித்துக்கொள்ள உதவும். அதன் செயற்கை நுண்ணறிவு நிரல்கள் பாதையில் குறுக்கீடுகள் இருந்தால், வேகத்தை குறைப்பது, நிறுத்துவது, லாவகமாக வளைந்து நெளிந்து செல்வது போன்ற முடிவுகளை நேனோநொடிகளில் முடிவெடுத்து செயல்படுத்துகிறது.

ஆப்டிமஸ் வேனுக்கு தரப்பட்டுள்ள வரைபட எல்லைக்குள் தான் பயணம் இருக்கும். பயணிகள், பார்வையாளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, ஓர் ஓட்டுனர் முன் சீட்டில் அமர்ந்திருப்பார் என்கின்றனர் ஆப்டிமஸ் அதிகாரிகள். ஆக, தானோட்டிகளின் வருகை, இனி தவிர்க்க முடியாததாகி விட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    இங்க இந்த மாதிரி கொண்டு வந்தால் அனைத்து கார்களும் மாயமாகிவிடும்....

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    அமேரிக்காவில் ஓட்டுநர் வேலைகளுக்கு ஆபத்து வைத்து விட்டது என்று கூவ ஆட்கள் தேவைக்கு இந்தியாவை அணுகலாம்....

Advertisement