Advertisement

2 வயதில் காணாமல் போனவர் 20 ஆண்டுக்கு பின் ஊர் திரும்பினார்

புளியந்தோப்பு:புளியந்தோப்பில், 2 வயதில் தொலைந்த ஆண் குழந்தை, 22 வயதில், பெற்றோரை சந்திக்க, அமெரிக்காவில் இருந்து வந்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புளியந்தோப்பு, நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர், நாகேஸ்வர ராவ், 47; பெயின்டர். மனைவி, சிவகாமி, 45. இவர்களது இளைய மகன் சுபாஷ், 1999ல், 2 வயதில் காணாமல் போனார்.காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டும், சுபாஷ் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. இதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2006ல், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து, அந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டது.
விசாரணையில், அமெரிக்க தம்பதி, திருவேற்காட்டில் இயங்கிய காப்பகத்தில், சுபாஷை தத்தெடுத்து சென்றது தெரிய வந்தது.மேலும், சுபாஷ் அமெரிக்காவின், விஸ்கான்சின் மாகாணத்தில், 'அவினாஷ்' என்ற பெயரில், வசித்து வருவது தெரிய வந்தது.இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள், சர்வதேச போலீஸ் உதவியை நாடினர். இதில், 2013ல், சுபாஷின், டி.என்.ஏ., பரிசோதனைக்காக, அவரது ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதில், சுபாஷ் ராகேஸ்வர ராவ் -- சிவகாமி தம்பதியின் மகன் என்பது உறுதியானது.இதையடுத்து, பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப்பின், 8ம் தேதி, அவினாஷ், வளர்ப்பு பெற்றோர் உதவியுடன், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார்.
இங்கு தன் பெற்றோர் மற்றும் சகோதரி சரளா, 27, சகோதரர் லோகேஷ், 24, ஆகியோரை சந்தித்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து, நாகேஷ்வர ராவ் கூறியதாவது:சுபாஷ் பேசும் ஆங்கிலம் எங்களுக்கு புரியவில்லை. இன்னொருவர் உதவியுடன் தான் புரிந்து கொள்கிறோம். என் மகனை, அவனது வளர்ப்பு பெற்றோரிடம் இருந்து பிரிக்க விரும்பவில்லை. அவர் நாளை, அமெரிக்கா செல்ல இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement