Advertisement

கொத்தடிமைகள் 13 பேர் மீட்பு

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே, 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த, 13 பேரை, வருவாய் துறையினர் மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பினர்.

பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட, குத்தம்பாக்கம் ஊராட்சி, உட்கோட்டையில், மரக்கட்டைகளை எரித்து, மரக்கரி தயாரிக்கும் தொழிற்கூடம் இயங்கி வருகிறது.அங்கு, சிலர், கொத்தடிமைகளாக இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, திருவள்ளூர் சப் - கலெக்டர் ரத்னா, பூந்தமல்லி தாசில்தார் காந்திமதி ஆகியோர் தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று காலை, அங்கு சென்று விசாரித்தனர்.அதில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த, 13 பேர், 10 ஆண்டுகளாக, கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரிந்தது.மேலும், அதன் உரிமையாளர் சங்கர், 51, என்பவர், 5,000 முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, முன்பணமாக கொடுத்து, வேலைக்கு அழைத்து வந்ததும், உரிய முறையில், ஊதியம் மற்றும் உணவு வழங்காததும் தெரிய வந்தது.இதையடுத்து, 13 பேரையும் மீட்ட வருவாய் துறையினர், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பினர். தலைமறைவாக உள்ள சங்கரை தேடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    அப்போ புகழ்,ஜெய்ஹிந்துபுரம், மாலிஸ்ராஜா, தாண்டவகோன் போன்றவர்களை எப்போ மீட்பீர்கள்......

Advertisement