Advertisement

சிட்லபாக்கம் மயான பகுதி ரூ.20 லட்சத்தில் சீரமைப்பு

சென்னை:'தாம்பரம் தொகுதி, எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், சிட்லப்பாக்கம் மயான பகுதி சீரமைக்கும் பணி நடைபெறுகிறது' என, தி.மு.க., -- எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா கூறிஉள்ளார்.
அவரது அறிக்கை:சிட்லபாக்கம், பெரிய ஏரியை, 25 கோடி ரூபாய் நிதியில், துார் வாரும் பணியில், தி.மு.க.,வினர், 'கமிஷன்' கேட்டு முட்டுக்கட்டை போடவில்லை; அந்த பணிக்கு, நிதியும் ஒதுக்கப்படவில்லை.ஏரியை சீரமைக்கும் பணிக்கு, டெண்டரும் விடப்படவில்லை. நடப்பு நிதியாண்டில், தாம்பரம், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், சிட்லப்பாக்கம் மயான பகுதி சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.குறிப்பாக, ஏரிகளை சீரமைக்கும் பணியில், அரசு பணத்தை ஆளுங்கட்சியினர் தவறாக பயன்படுத்துவது குறித்து, எங்களிடம் வந்தால், விவாதிக்க தயார்.இவ்வாறு எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement