Advertisement

முதியவர்களை கொல்லும் தம்பதி

சென்னை:'வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து, தனியாக வசிக்கும் முதியவர்களை கொன்று, கொள்ளையடிக்கும், ஆந்திர தம்பதி குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்' என, போலீசார் அறிவித்துள்ளனர்.
ஆவடி, அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர், ஜெகதீசன், 65, இவரது மனைவி, விலாசினி, 58. இருவரும், அரசு அச்சக துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்கள். இவர்கள், அதே பகுதியில் உள்ள, பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.தலைமறைவுகடந்த, 2018, நவ., 27ம் தேதி, வீட்டில், மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.இவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, சுரேஷ், 28, இவரது மனைவி, பூவலட்சுமி, 22, ஆகியோர், 3 வயது மகனுடன் தலைமறைவாகினர்.போலீசாரின் விசாரணையில், இவர்கள், வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து, தனியாக வசிக்கும், முதியோரை கொன்று, கொள்ளையடிப்பவர்கள் என, தெரிய வந்தது. மேலும், இவர்கள் மீது, ஆந்திராவில், திருட்டு மற்றும் கொலை தொடர்பாக, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அம்மாநில போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.சம்பவத்தன்று, இருவரும், மகனுடன், சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, ஹவுரா விரைவு ரயிலில், ஆந்திராவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.தகவல் தெரிவிக்கவும்இதையடுத்து, ஆவடி போலீசார், தனிப்படை அமைத்து, ஆந்திராவில் முகாமிட்டு, சுரேஷ் மற்றும் பூவலட்சுமி ஆகியோரை தேடினர். இவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், போலீசார் பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர். சுரேஷ் மற்றும் பூவலட்சுமி ஆகியோரின் படத்துடன், எச்சரிக்கை, 'நோட்டீஸ்' அச்சடித்து வழங்கி வருகின்றனர். அதில், 'படத்தில் இருப்பவர்கள், வீடு வாடகைக்கு கேட்பது போல வருவர்; எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் மீது, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.இவர்கள் பற்றி தகவல் தெரிந்தால், 94448 03562 மற்றும், 94981 06608, அவசர போலீஸ் எண்: 100க்கு தகவல் தெரிவிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Ajit Kumar vanniyan - Chennai,இந்தியா

    இது மாதிரி தப்புகள் இப்பொழுது நமது மதத்தில் அதிகமாக இருக்கிறது, ஆர் எஸ் எஸ் ஹிந்து முன்னணி போன்றவர்கள் நமது மதத்திற்காக உழைப்பவர்கள் என்று சொல்கிறார்கள், அவர்கள் ஏன் இது போன்ற தப்புகளுக்கு குரல் குடுக்க மாட்டேங்குறார்கள், நமது மக்களுக்கு இது போன்று செய்வது தப்பு என்று நமது ஹிந்து மதத்தை சரியாய் சொல்லி தர முயற்சி எடுக்க வேண்டும்

    • Jaya Ram - madurai,இந்தியா

      தவறு இப்போ கோயம்பத்தூரில் பிடிபட்டுள்ள வங்க தேசத்தினை சேர்ந்த முஸ்லீம் அவருக்கு ரேஷன் கார்டு முதல் ஆதார் கார்டு வரை வழங்கப்பட்டுள்ளது ஒரு தடவை ஜெயா முதல்வராக இருந்தபோது வடநாட்டு தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கும் போது அவரைப்பற்றிய விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக கொடுக்கவேண்டும் என்ற கூறப்பட்டது காவல் துறையால் உடனே ஒரு காம்ரேட் புலி வரதராஜன் ஒருநாட்டிற்குள்ளே அடையாள அட்டை கேட்பதா? என்று குதித்தார் கடந்த பத்துவருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை கொள்ளை சம்பவங்களுக்கும் இப்போ இந்த வடநாட்டார் வருகைக்கு பின்னர் நடக்கும் குற்ற பின்னணிகளுக்கும் எவ்வளவு அதிகம் என்பதை அவர் கேட்கமாட்டார் ஏனென்றால் அவர்கள் கொள்கை என்ன தெரியுமா உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் , உள்ளூர் தொழிளார்களே பட்டினிகிடங்கோ என்பதுதான் , அப்படித்தானே இப்போ இங்குள்ளவனுக்கு வேலையில்லை அவர்கள் திரும்பும் திசையெங்கும் இருக்கிறார்கள் எங்கள் ஏரியாவில் தமிழ் குரலை கேப்பதே குறைந்து கொண்டு வருகிறது

Advertisement