Advertisement

மயிலை அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு

மயிலாப்பூர்:மயிலாப்பூர், துர்க்கையம்மன் கோவில் வளாகத்தில், ஐம்பொன் கிருஷ்ணர் சிலை மாயமானது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூர், அப்பர்சாமி கோவில் தெருவில், 125 ஆண்டு பழமை வாய்ந்த, துர்க்கையம்மன் கோவில் உள்ளது.கோவிலில், அறங்காவலர்களாக, அதே பகுதியைச் சேர்ந்த, ஜீவா, பலராமன், ரவி, குணசேகரன், ரமேஷ் மற்றும் தங்கதுரை ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கோவில் குருக்கள் உமாசங்கர், கருவறை துர்க்கையம்மனுக்கு, பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, கோவில் வளாகத்தில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.பூஜை முடித்து, வெளியே வந்து பார்த்த போது, கோவில் வளாகத்தில், சிறிய மர அறையில் வைக்கப்பட்டிருந்த, 1 அடி உயரம் உள்ள, ஐம்பொன் கிருஷ்ணர் சிலை, மாயமாகி இருந்தது.இது குறித்து, நேற்று மதியம், அறங்காவலர்கள், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.கோவிலில், கண்காணிப்பு கேமரா பொருத்தப் படாததால், குற்றவாளியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement