Advertisement

சினிமாவுக்கு ஜி.எஸ்.டி.,யில் சலுகை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தல்

சென்னை:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனை சந்தித்து, சினிமா துறை வளர்ச்சிக்கான, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, மனு அளித்தனர்.
மத்திய நிதியமைச்சர்,நிர்மலா சீதாராமன், சென்னை வந்துள்ளார். அவரை, நேற்று, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்தித்து, பேசினர். அப்போது, சினிமா துறை வளர்ச்சிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். இது குறித்து, திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு அறிக்கை:தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தியேட்டர்களில், 'ஆன்லைன்' டிக்கெட் பதிவு செய்ய, உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.சினிமாவுக்கான, ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், சில சலுகைகள் வேண்டும்; டிக்கெட் விற்பனையின்போதே, ஜி.எஸ்.டி.,க்கான தொகை, நேரடியாக, ஜி.எஸ்.டி., கணக்கில் சேர வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக, அமைச்சர், உறுதி அளித்தார். மேலும், தயாரிப்பாளர்கள், டில்லிக்கு வந்து, சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பேசினால், நிச்சயம் தீர்வு கிடைக்கும் என, அமைச்சர் அறிவுறுத்தினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement