Advertisement

அ.தி.மு.க., பிரமுகர் கைது

சென்னை:கோவையைச் சேர்ந்தவர்,விசித்ரா; தொழில் அதிபர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:கிழக்கு தாம்பரம், இரும்புலியூரைச் சேர்ந்தவர்,மாணிக்கம், 66; அ.தி.மு.க., பிரமுகர். இவரது மகன், எட்வின். இவர்களிடம், இரும்புலியூரில், தேவாலயம் அருகே உள்ள, 1.8 ஏக்கர்நிலத்தை, 5.50 கோடி ரூபாய்க்கு வாங்கினேன்.அங்குள்ள சிலர், இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என, தடுத்து விட்டனர். இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, விசாரித்த போலீசார், மாணிக்கம் மற்றும் அவரது கூட்டாளிகள், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த நிலத்தை, விசித்ராவுக்கு விற்றது தெரியவந்தது. மாணிக்கம் உள்ளிட்டோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement