Advertisement

அபராதம் குறைப்பு: மாநில அரசுகள் முடிவு

புதுடில்லி: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.


புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் வசூலிக்கப்படுகிறது. டில்லியில், லாரி உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சமும், ஒடிசாவில் லாரி டிரைவருக்கு 70 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் ஜீப்பை தீவைத்து எரித்தார். மோட்டார் வாகன சட்டங்களுக்கான அபராதத்தை குஜராத் மாநில அரசு, 50 சதவீதம் குறைத்துள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்யலாம். விபத்துகளில் இருந்து காப்பதற்காக தான் அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தை பெருக்க அல்ல. விபத்துகளில், இளைஞர்கள் தான் அதிகளவில் உயிரிழக்கின்றனர். அபராதம் மூலம் கிடைக்கும்,வருமானம் மாநில அரசுகளுக்கு தான் செல்லுமே தவிர, மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (42)

 • orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா

  புஸ்ஸ்ன்னு ஆகிட்டாரே.....

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  ஏற்கனவே தமிழ்நாடு ஒரு மாதிரி..கடாரம் கொண்டவர்கள்..கனகவிசயர் தலையில் கல் சுமக்க வைத்தவர்கள்..இமயத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டவர்கள் என்று பழம் பெருமையில் திளைத்துக் கொண்டு காலம் தள்ளுபவர்கள். இதில் மத்திய அரசு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் சும்மா விடுவோமா? போர்ப்பரணி பாடிக் கொண்டு சிலிர்த்துக் கொண்டு கிளம்பிர மாட்டோமா? எல்லாத்தையும் அரசியல் கண்ணோட்டத்துலதான் பார்த்துதலையில மண்ண வாரி போட்டுக்குவோம். நாங்க தமிலர்கள் இல்லியா?

 • konanki - Chennai,இந்தியா

  மூர்க்கத்தனமாக எல்லாவற்றையும் எதிர்க்கும் கூட்டம். சட்டத்தை மீறுபவர்கள் மீது தான் இந்த கடுமையான நடவடிக்கை. இதில் பாதிப்பு சட்டத்திற்கு முரணாக நடக்கும கூட்டத்திற்கு தான். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சட்டத்தை மீறுவது தான் இந்த எதிர்ப்பு க்கான காரணம். ஆனால் இதே கும்பல் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் அரசு தான் காரணம் என்று குறை சொல்லி சுய ஒழுக்கம் இன்றி திரியும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கோமாளித்தனம் தான். முதல் விஷயம் : சாலைவிதிகள் நடைமுறை மாநில பொலீசாரின் அதிகாரத்துக்குட்பட்டது. 2. சாலைவிதிகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வரம்பு களைக் கொண்டவை. உதாரணமாக, தமிழக த்தில் ஸ்டேட் ஹைவே உச்ச வேகம் 90 kmph. இதுவே கேரளாவில் 70 kmph. மகாராஷ்டிரா (புனே ஹைவே) வில் 100 kmph.3. எனவே சாலைவிதிகள் மீறலுக்கான அபராதத்தை ம. அரசு விதித்தது தவறு.

  • HCM - KJM,இந்தியா

   முட்டாளே

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   @புகழ், வேடிக்கையான கருத்து .............. விபத்தை ஏற்படுத்தக் கூடிய வேகம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடக் கூடியதல்ல ............... போக்குவரத்து நெரிசலைப் பொறுத்தது வேக அளவு ..... நகர்ப்புறம், கிராமப்புறம் என்று வேண்டுமானால் மாறலாம் .........

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  ஒரு வாரம் நன்றாக இருந்தது. அபராதத்துக்கு பதில் சிறை தண்டனை விதித்தால் தமிழன் திருநதுவான்.

Advertisement