Advertisement

அள்ளிக்கொடுக்குது பொங்கல் லீவு

சென்னை: புதிய வருடம் தொடங்கி விட்டால் அனைவரும் விடுமுறை தினங்களை தேடுவது வழக்கம். அதிலும் ஜனவரி மாதத்தில் விடுமுறைக்கு பஞ்சம் இருக்காது. ஆங்கில வருடப்பிறப்பு, பொங்கல் பண்டிகைகள், குடியரசு தினம் என அரசு விடுமுறைகள் அதிகம். அடுத்த வருட (2020) பொங்கல் பண்டிகை, தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, ஜன., 11, 12 நாட்கள் வார விடுமுறையாகவும், ஜன., 13 (திங்கள் கிழமை) மட்டும் விடுப்பு எடுத்தால், ஜன., 14 முதல் 17 (வெள்ளி கிழமை) வரை போகி பண்டிகை, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது.

தொடர்ந்து மீண்டும் வார விடுமுறை வருகிறது. ஜன., 13 மட்டும் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறையை பொங்கல் பண்டிகை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (36)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  முன்பு ரத்னவேல் பாண்டியன் அவர்கள் நிதி கமிஷன் தலைவராக இருந்த போது சமர்ப்பித்த அறிக்கையில் அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் தாறுமாறாக உயர்த்தப்பட்டு விடுமுறை மாத்திரம் மூன்றே நாட்கள் என்று அறிவுறுத்தப்பட்டது (America போல) அங்கே மூன்றே விடுமுறை நாட்கள்தான் இன்றும். தேவைப்பட்ட மத விஷயங்களுக்கு ஊழியர்களின் casual எண்ணிக்கை கூட்டப்பட்டது -அதாவது ரம்ஜான் க்கு ஹிந்துக்களும் கிறிஸ்துவர்களும் ஏன் விடுமுறை அனுபவிக்க வேண்டும்?அரசு வேலை ஏன் பாதிக்கப்பட வேண்டும் ?அதே போல Krishna ஜெயந்தி என்றால் ஹிந்துக்கள் மாத்திரம் விடுமுறை எடுத்தால் போதுமே என்ற எண்ணமே காரணம்.இதனால் வேலையும் நிற்காது என்பதே குறிக்கோள்.அப்போது அவ்வளவு சம்பள உயர்வு கொடுத்து விட்டு இந்த மாதிரி விடுமுறையை மாற்றி இருந்தால் நிலைமை நன்றாக இருந்திருக்கும், அதை காங் அரசு செய்யதவறியது.இந்த நிலைமையினாலேயே இப்போ வங்கிஊழியர்களும் நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் செய்யவும் ஒரு காரணம்.

 • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

  ஒரு மிகப் பெரிய விபத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். எனக்குத் தெரிந்து மும்பை கல்கத்தா ஆகிய இரு நகரங்களில் இருவேறு நேரங்களில் நடந்தது இது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை. வீட்டுக்குப் போகும் அவசரத்தில் ஒரு பெண் கஸ்டமரை லாக்கர் இருட்டறையிலியே வைத்துப் பூட்டி விட்டு சென்று விட்டனர். நான்கு நாட்கள் கழித்து லாக்கர் முறையைத் திறந்தால் அரை மயக்க நிலையில் கிடந்தாள். நீண்ட நாட்கள் விடுமுறை விடும்போது தகுந்த முன் எச்சரிக்கைகள் அவசியம். வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களை வேலை செய்ய விட்டு விட்டு சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

 • karutthu - nainital,இந்தியா

  ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த பொழுது இப்படித்தான் ஜனவரி மாதத்தில் அதிக பட்ச விடுமுறை வந்தது பொது நலன் கருதி அரசு விடுமுறைகளை வங்கி விடுமுறைகளையும குறைத்தார் இவர்களுக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறை தேவையில்லை மக்கள் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்

 • agni - chennai,இந்தியா

  பூமி ஒரு 66 .5 டிகிரி ஒருபுறமா சாய்த்து சுத்துது ,அதனால நாம் வசிக்கும் பூமி பகுதி 6 மாதம் சூரியனை நோக்கி இருக்கும் போது வெப்பம் மிக்க கோடை காலமாகவும் ,6 மாதம் சூர்யனிடமிருந்து தூரமாக இருக்கும் போது நமக்கு குளிர் காலமாக இருக்கும்,ஜூன் முதல் ஆறு மாதம் நாம் இருக்கும் பூமி பகுதி சூர்யனுக்கு தூரமாக இருக்கும்,இது நமக்கு இருண்ட ,குளிர் ,பனி காலம் அதனால் தான் அன்று விவசாயத்தை தொழிலாக கொண்ட முன்னோர்கள் விவசாயத்திற்கு சூரிய ஒளி,சக்தி முக்கியம்,சூரிய சக்தி இல்லாமல் புவியில் பயிர்கள், உயிர்கள் எதுவும் வளர்ச்சி பெறாது ,குளிரால் சோம்பல்,கிருமிகள்,தொற்று நோய்கள்,உடல் உழைப்பின்றி சுறுசுறுப்பின்றி உணவு,செரிமானமின்றி உடல் பாதிப்புகள் நோய்கள் தான் பெருகும் இதை அறிந்து தான் சூர்யன் இல்லாத குளிர் மிக்க இருட்டு காலத்தில் துவக்கம் நவராத்ரி பண்டிகை அக்காலம் தொடங்கி மார்கழி வரை ஆன்மிகம்,பக்தி என தங்களை மிக உயிர்ப்புடன் வைத்து கொண்டார்கள்,பின் சூரிய வெளிச்சம் பூமிக்கு வர துவங்கும் தை மாதத்தில் கதிரவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடி மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். புவி சூரியன் நோக்கி செல்லும் காலம் ,சூரியனின் ஒளி புத்துணர்வோடு புவியின் நம் மண்ணில் துவங்கும் போது பயிர்கள் ,மண்ணின் உயிர்கள் புத்துணர்வோடு வளர்ச்சி பெற துவங்கும்.இதனால் தான் நாம் போகி,பொங்கல்,மாட்டு பொங்கல் ,உழவர் தினம் என இக்காலத்தை பெரிய அளவில் கொண்டாடுகிறோம்.இந்த வெள்ளைக்காரன் கொண்டு வந்த சனி,ஞாயிறு விடுமுறைகளால் பாதிப்பு,இதனால் சிறப்பு நம் பண்டிகைகளுக்கு விடுமுறை கொடுப்பதை பாதிப்பாய் பார்க்கிறார்கள்.

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அமெரிக்காவில் floating holiday என்று வைத்திருக்கிறார்கள். ஒரு முஸ்லீம் கிறிஸ்துமஸ் அன்று வேலை செய்யலாம். ஒரு இந்து தீபாவளியின் போது லீவு எடுத்துக் கொள்ளலாம். ஒரு வருடத்துக்கு ஒரு ஏழு இல்லை எட்டு floating holiday கிடைக்கும். அதைத் தவிர மாதா மாதம் சேர்க்கும் விடுமுறை (ஒரு வருடத்துக்கு இருபத்தொன்றிலிருந்து முப்பத்தைந்து நாட்கள் வரை உண்டு). இதனால், எல்லோரும் ஒரே சமயத்தில் லீவில் போக முடியாது. அரசாங்க விடுமுறைகள் மிகவும் குறைவு. இந்தியாவிலும் இதைக் கொண்டு வர வேண்டும். சில பேருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. அதனால் அவர்கள் வேலைக்கு வருவார்கள். போலீஸ், ராணுவம், தீயணைப்பு, மருத்துவம் போன்ற துறைகளில் இந்த சலுகைகள் கூட கிடையாது. கொட்டும் பனியிலும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும்.

Advertisement