Advertisement

பாக்.,ல் பெட்ரோலை விட பால்விலை அதிகம்

கராச்சி : பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை விட பால் விட அதிகரித்துள்ளது. அங்கு ஒரு லிட்டர் பால் விலை ரூ.140 க்கு விற்பனையாகிறது.


மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாக்.,ன் முக்கிய நகரங்களில் பால் விலை புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. பாக்.,ல் பெட்ரோல்-டீசல் விலை, பால் விலையை விட குறைவாகவே காணப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.113 க்கும், டீசல் ரூ.91 க்கும் விற்கப்படுகிறது. இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மொகரத்தின் போது பால் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவை அதிகரிப்பின் காரணமாக கராச்சி, சிந்து உள்ளிட்ட பகுதிகளில் பால் விலை லிட்டருக்கு ரூ.120 முதல் 140 வரை விற்பனையாகிறது. மொகரத்தை முன்னிட்டு ஊர்வலமாக செல்பவர்களுக்கு வழங்குவதற்காக பால், ஜூஸ் உள்ளிட்டவைகள் தயார் செய்வதற்காக அதிகமாக பால் தேவைப்பட்டதால் பால் விலை உயர்ந்துள்ளது. பொதுவாக பாக்.,ல் பாலின் அதிகாரப்பூர்வ விலை ரூ.94 ஆகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

  • vigneshwaran - MADURAI,இந்தியா

    அங்கு தக்காளி வெங்காயம் கூட விலை உயர்வு தான் எனென்றால் அத்தியாவசிய பொருட்கள் சில இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி செய்ய படுகிறது

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    நெறையா கழுதைகளை சீனாவுக்கு ஏற்றுமதி பண்ணி தான் அந்நிய செலாவணி கெடைக்குதாம். கிளியோபாட்ரா கூட கழுத்தை பாலில் குளிச்சவ தான்..பாகிஸ்தானிலே எல்லாம் கிளியோபாட்ராவா இருப்பாய்ங்க ..கூடிய சீக்கிரம்..

  • M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா

    பெட்ரோல் உயிர் வாழ முக்கியமில்லை ஆனால் பால் என்பது மனிதன் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே இதில் என்ன அதிசயம் இருக்கிறது.

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    குவைத் சுந்தரமும், uae ஜனர்த்தனமும், பாகிஸ்தான் சென்று செட்டிலே ஆகலாம்

    • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      பாஸ், யாரு அந்த காட்டன் இருக்கும் ஊர்க்கு போவது ????

  • Rajas - chennai,இந்தியா

    தங்க முட்டை கோழி கதை தான். தினமும் கொஞ்சமாக மாடுகள் பால் தந்து ஏமாற்றுகிறது. அதற்க்கு பதிலாக மாடுகளை வெட்டி விட்டு பார்த்தால் உள்ளே அதிக பால் இருக்கும் என்று நினைத்திருப்பார்கள்.

Advertisement