Advertisement

டூவிலர்-வேன் மோதல்: இருவர் பலி

அரியலூர்: பெரம்பலூர் அருகே டூவிலர் மீது வேன் மோதி தீபிடித்ததில் இருவர் பலியானார்கள்.
அரியலூர் மாவட்டம் பெரம்பலூரை சேர்ந்த முஜிபுல்லா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் வேலை பார்க்கும் நண்பர் விடுமுறைக்காக தன் சொந்த ஊரான தஞ்சாவூர் வந்திருந்தார். இந்நிலையில் இவரை சந்தித்து தன் தந்தைக்கு சில பொருட்களை கொடுத்து அனுப்ப நினைத்த முஜிபுல்லாவின் இரு மகன்கள், டூவிலரில் தஞ்சாவூர் நோக்கி சென்றனர்.
கீழப்பழூர் அருகே வந்துக் கொண்டிருந்தபோது தஞ்சாவூரில் இருந்து அரியலூர் நோக்கி வந்த சுற்றுலா வேன் டூவிலரில் மோதியது. இதில் வேன் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் பலத்த காயமடைந்த முஜிபுல்லாவின் மகன்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • LAX - Trichy,இந்தியா

    அடக்கடவுளே.. தந்தை வெளிநாட்டில்.. அவருக்கு பொருட்களைக் கொடுத்தனுப்ப சென்றபோது மகன்கள் இருவரும் விபத்தில் பலி.. மிகவும் வேதனையான விஷயம்..

Advertisement