Advertisement

பிளாஸ்டிக் தவிர்ப்போம்: பிரதமர் அழைப்பு

மதுரா: வரும் அக்.,2 க்குள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

கால்நடைகளுக்கான தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை, உ.பி., மாநிலம் மதுராவில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதற்காக மதுரா வந்த பிரதமர் மோடியை, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

தொடர்ந்து, விழா நடந்த இடத்திற்கு சென்ற பிரதமர், பசு மற்றும் கன்றுக்குட்டிகளை பார்வையிட்டார். நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும், அதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் குறித்தும், கால்நடை மருத்துவர்களிடம் கலந்துரையாடினார். கால்நடை மருத்துவ கண்காட்சியையும் பார்வையிட்டார். கால்நடைகளுக்கான தேசிய செயற்கை கருத்தரிப்பு திட்டத்தையும் துவக்கி வைத்தார்.


இதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: தேசத்தின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்களிப்பு உள்ளது. விலங்குகளை காப்பது நமது கலாசாரத்தில் ஒரு அங்கம். இதற்கு கடவுள் கிருஷ்ணர் முன்மாதிரியாக உளளார். விலங்குகளுக்கு ஏற்படும் நோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளோம்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை நாம் கைவிட வேண்டும். அக்.,2க்குள் வீடு, அலுவலகம் மற்றும் பணி செய்யும் இடங்களில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். இதற்கான இயக்கத்தில், சுய உதவி குழுக்கள், தனி நபர்கள், சிவில் அமைப்புகள் இணைய வேண்டும். மக்கள், கடைகளுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் மாற்று பொருட்களை எடுத்து செல்ல வேண்டும்.
பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து சாலை அமைக்க வேண்டும்.உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த நமது மனநிலையை மாற்ற வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை வர்த்தகர்கள் குறைக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். மஹாத்மாவின் கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.
கால்நடை வளர்ப்பு நமக்கு முக்கியமானது. பசுவில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் முக்கியமானது. தூய்மைக்காக யோகி அரசு உழைத்துள்ளது. சமூக விரோத சக்திகள் இதனை கெடுக்க முயற்சி செய்கிறது. அனைவருக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தண்ணீர் சேகரிப்பை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கால்நடைகளை காக்க ருவாண்டா சிறப்பான வழியை கடைபிடிக்கிறது.
கால்நடை வளர்ப்பு, விவசாயிகளுக்கு வருமானத்தை கொடுக்கும், அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். கால்நடைகள் பாதுகாப்பில், அரசு தீவிரமாக உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோயை தடுக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் துவக்கப்படும். சிலருக்கு 'ஓம்' அல்லது 'பசு' என்ற வார்த்தை சொல்வது பிடிக்காது. அவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. நாடு பின்னோக்கி செல்கிறோமா என கேட்கின்றனர். பசுக்களை பாதுகாப்பது தவறு அல்ல. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை சேகரிக்கும் பெண்களை மோடி சந்தித்து, அவர்களின் பணிகளை பார்வையிட்டார். பின்னர், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் எந்திரத்தின் இயக்கத்தையும் துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இந்திய பிரதமர் எந்தெந்த விவகாரங்களை கவனிக்க வேண்டும் என்று கூடத் தெரியாமல், தெருவை பெருக்கு குப்பை பொறுக்கு என்று சம்பந்தமே இல்லாமல் ஸீன் போட்டுட்டு இப்போது அடுத்து ப்ளாஸ்டிக் ஸீன். What are the roles and responsibilities of PM is not briefed to him by his secretaries???? Pathetic. Very pathetic

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் அமெரிக்கா சட்டங்களை பின்பற்றுகிறார்கள். சீன முஸ்லிம்கள் சீன சட்டங்களை பின்பற்றுகிறார்கள். அப்ப இந்தியா முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் ?? ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கை கூட மறு சுழற்சி செய்யலாம்.

 • ஆப்பு -

  நல்ல மாற்று இல்லாம இருக்கறத ஒழிச்சிருவாங்க. ஒருமுறை பயன்பாடு ப்ளாஸ்டிக் மேல் 25 சதம் வரி விதித்து அந்த வருமானத்த வெச்செ ப்ளாஸ்டிக் மறு சுழற்சி செய்யலாமே...

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  On one hand Govt gives licences to Plastic Industries and making plastic bags. On the other hand Govt wants people not to use Plastics. Many States have tried Plastic eradication and failed miserably and now the PM has come into the arena. Without thinking on actions for natives to Plastics and the employment for Plastic Company workers the Plastics can not be eradicated in India. This is like Govt their shares in Cigarette manufacturing Companies and warning the people with prints of ill effects of Tobacco . If any product is harmful first action should be stop producing these harmful items. Leaving this advising people not to use plastics how it is logical. This gives us a feeling that these are dramas of the Govt.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  பிளாஷ்டிக்க்கை தவிர்ப்போம் சரி அப்பூ தற்போது உபயோகத்தில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலி , குடம், விளையாட்டு பொருட்கள் , கூடை, , பாட்டில் இன்னும் பயன் பாட்டில் , உள்ள எத்தனையோ பொருட்களை எப்படி டிஸ்போஸ் செய்வது ?? புது ர்சட்டம் போடுவீங்களா

Advertisement