Advertisement

ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய்: அமைச்சர் நக்கல்

விருதுநகர்: முதல்வர் இ.பி.எஸ்., வெளிநாட்டு பயணத்தில் கிடைத்த முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, வெள்ளை, மங்சள், பச்சை அறிக்கையுடன் வெள்ளரிக்காய் கூட தருவோம் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கிண்டலாக கூறியுள்ளார்.


முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திரபாலாஜி சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டு திரும்பினர். முதல்வர் பயணத்தில், தமிழகத்தில் பல ஆயிரம் கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக தமிழக அரசு கூறியது.

பாராட்டு விழா
இந்நிலையில், முதல்வர் பயணம் குறித்து கேள்வி எழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட முதல்வர் என்ன செய்தார். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டால், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளதாக கூறினார்.

சிறுபிள்ளைத்தனம்இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விருதுநகரில் அளித்த பேட்டி: தமிழகத்தில், ஸ்டாலின் தவிர்த்து, அனைவரும் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை பாராட்டுகிறார்கள். ஸ்டாலினுக்கு பொறாமை, இயலாமையில் பேசுகிறார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கையுடன், பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காய் கூட தருவோம்.
தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தவுடன் தொழில் துவங்க முடியாது. முதலீடு விஷயத்தில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது. ஸ்டாலின் என்ன கணக்கு பிள்ளையா? அவரிடம் கணக்கு காண்பிக்க.இங்கிலாந்து, துபாய் சென்று, பால்வளத்துறையை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை அறிந்து வந்தோம். தமிழகத்தில், எடப்பாடி பசுமை புரட்சியை ஏற்படுத்துவார். சேலத்தில் பால்வள ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். தொழில்துறையில், தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.புலம்பல்இது குறித்து திமுக உடன்பிறப்புகள் சிலர் கூறும் போது, எங்கள் தலைவர் ஸ்டாலின், மிக சீரியசாக வெள்ளை அறிக்கை கேட்டால், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதை வெள்ளரிக்காய் என்று கூறி இப்படி காமெடியாக்கி விட்டாரே என புலம்பினர்.

8 வது அதிசயம்பரமக்குடியில், அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி, துபாய் சென்ற முதல்வர் இ.பி.எஸ்., 8,300 கோடி முதலீடு ஈர்த்துள்ளார். இதன் மூலம் 8 வது உலக அதிசயத்தை நிகழ்த்தி உள்ளார். இந்தியாவில் உள்ள மற்ற முதல்வர்களுக்கு எல்லாம், வழிகாட்டியாக திகழ்கிறார்.ஸ்டாலினுக்கு வெள்ளை மனம் இல்லை. இதனால் தான், வெள்ளை அறிக்கை கேட்கிறார்.முதல்வர் பயணத்தில் கிடைத்த முதலீடு காரணமாக, தமிழகத்தில் தொழில் வளம் பெருகும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். திமுக 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அவர்கள், செய்யாததை, புரியாததை, அறியாததை அனைத்தையும் எடப்பாடி செய்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (76)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  கூடவே எலுமிச்சம் பழமும் கொடுக்கும் படி பாலாஜி அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  ராஜேந்திர பாலாஜி, கலக்குறாருப்பா அவரோட ரசிகரா மாறிட்டோம். எதையும் ஆக்க பூர்வமாக பேசாமல், தத்து பிடித்துண்ணு அரசை குற்றம் சாட்டும் தொனியிலேயே எப்போதும் ஒளறிக்கிட்டு இருக்கிறதுக்கு சரியான பதில். கட்டு மரம் அந்த காலத்தில பேசாத பேச்சா, பண்ணாத கிண்டலா, கேலியா? இந்த ஆள் அடுத்தவங்களை, ஆன்மீக வாதிகளை, அடுத்த கட்சிக்காரர்களை கேலி, கிண்டல் பண்ணலயா?

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  ஒன்னு அறைக்கெனம் மர்றது முழுகெனம்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  தலைப்பு வெவகாரமா இருக்குதே ?? எந்த அர்த்தத்துல சொன்னாரோ ??

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இரு தரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்படும் வாதங்கள் அர்த்தமற்றவையாக, தரக்குறைவானவையாக இருக்கின்றன ............... தமிழர்களுக்கு நன்றி .......

Advertisement