Advertisement

ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்

புதுடில்லி: விதிமுறைகளை மதிக்காததற்காகவும், அதிக எடை கொண்ட பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் ராஜஸ்தானை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


நாட்டின் பல மாநிலங்களில், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், டில்லியில் நடந்த வாகன சோதனையில், ராஜஸ்தானை சேர்ந்த பகவான் ராம் என்பவருக்கு சொந்தமான லாரியை மடக்கி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையை ஏற்றி சென்றது, உரிய அனுமதி பெறாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, பகவான் ராமுக்கு ரூ.1.41,700 அபராதம் விதிக்கப்பட்டது. பகவான் ராம், அபராதத்தை டில்லி கோர்ட்டில் செலுத்தி, லாரியை மீட்டு சென்றார்.

புது சட்டம் அமலுக்கு வந்த பின்னர், அதிக அபராதம் செலுத்திய நபர் இவர் ஆவார். முன்னதாக, ஒடிசாவில் போக்குவரத்து விதிகளை மீறிய லாரி டிரைவருக்கு, மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ், 86 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

  • Kalyanaraman -

    அபராதம் விதிப்பது அரசின் உரிமை. ஆனால் அதற்குமுன் அரசை நோக்கி ஒரு நியாயமான கேள்வி வந்தாலும் அதற்கு பதில் சொல்லவேண்டியது அரசின் கடமை. இங்கே எந்த அரசும் உரிமை,கடமை இரண்டையும் மதிப்பதில்லை. அப்படி மதிக்காத அரசை மக்கள் மதிக்க வேண்டுமா? என்றுமே அரசியல் சதுரங்கத்தில் மக்கள் பகடைக்காய்கள்தான்.

  • Kumaravel -

    பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் மோட்டார் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது.அதேபோல் கட்டுபாடில்லாமல் புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    புதிய வாகன சட்டம், கெடுபிடிகள் தேவை தான். ஆனால், இதனால் விலைவாசி ஏறும். ஒரு லாரியில் சென்றுகொண்டிருந்த படத்தில் உள்ள பொருட்கள் இரண்டு அல்லது மூன்று லாரிகளில் அனுப்ப வேண்டி இருக்கும்.

  • hasan - tamilnadu,இந்தியா

    அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான (தோராயமாக 55 லிருந்து 60 ) பயணிகளை ஏற்றி சென்றால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிது ,சட்டம் அனைவருக்கும் சமம்தானே

    • abdul rajak - trichy,இந்தியா

      அடுத்தவர்கள் தப்பு செய்கிறார்கள் என்பதற்காக நம் தப்பை நியாயப்படுத்த கூடாது .அது வேற விஷயம். அதை அரசு பார்த்து கொள்ளும் .

    • Swaroopa Metha - Gopalapuram,இந்தியா

      இதுல ஏதும் உன்னோட விஞ்ஞான மூளையை உபயோகப்படுத்தல்லயாடா ரசாக்கு. வழக்கமா இவ்வளவு லோடு ஏத்திக்கிட்டு இவ்வளவு டிகிரில லாரி திரும்பினால் தான் விபத்து ஏற்படும். தாடி வெச்சு தொப்பி போட்டவன் ஓட்டினால் எவ்வளவு லோடு ஏத்தினாலும் விபத்து நடக்காது. அப்படின்னெல்லாம் உன் மூளையில் முத்துக்கள் உதிருமே. இன்னிக்கு என்ன ஆச்சு.

  • Sridharan -

    தரமற்ற சாலைகள்தரமான அபராதம்வாழ்க இந்தியாவல்லரசுயை நோக்கிய பயணம் புதிய இந்தியா பிறந்தது அய்யா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவு நிறைவேறியது

Advertisement