Advertisement

வீட்டுக்காவலில் சந்திரபாபு

அமராவதி : ஆந்திராவில், ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேரணி செல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, அவரது மகன் மற்றும் கட்சி முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றது முதல் தற்போது வரை, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில், கர்னுல் மாவட்டத்தில் உள்ள அதம்கூர் நகரில், பேரணி நடத்த முடிவு செய்த அக்கட்சி, அப்போது ஜனநாயகத்தை காக்க வேண்டும், மனித உரிமைகளை காக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் எனக்கூறியது. ஆனால், இந்த பேரணிக்கு, தெலுங்கு தேசம் அனுமதி வாங்கவில்லை என மாநில அரசு கூறியது.


இந்நிலையில், இன்று(செப்.,11) பேரணிக்கு தடை விதித்த போலீசார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, மகன் நாரா லோகேஷ் மற்றும், கட்சி முக்கிய தலைவர்களை வீட்டு காவலில் வைத்தனர். சந்திரபாபு வீட்டிற்கு செல்ல முயன்ற, தொண்டர்களையும் கைது செய்தனர்.மேலும் நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பூமா அகிலா பிரியாவும், முன்னெச்சரிக்கையாக, நோவோடெல் ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டார்


உரிமை மீறல்தனது வீட்டு வாசலில் நிருபர்களை சந்தித்த சந்திரபாபு, போலீசாரின் நடவடிக்கை கோரமானது. வரலாற்றில் இல்லாதது. மாநில அரசு, மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் மீறுகிறது. இதற்காக அரசுக்கும், போலீசாருக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். எங்களை கைது செய்து, கட்டுப்படுத்த முடியாது என்றார்.

கோஷம்தனது வீ்ட்டில் இருந்து சந்திரபாபு கிளம்பிய போது, போலீசார் வாசலில் தடுப்புகளை வைத்து தடுத்தனர். சுமார், அரை மணி நேரம் சந்திரபாபு காரில் காத்திருந்தார். இருப்பினும் அனுமதி வழங்கப்படவில்லை. வாசலில் கூடியிருந்த தொண்டர்கள், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். தனது வீட்டுக்காவல் முடிந்ததும் பேரணியை துவங்குவேன் என சந்திரபாபு அறிவித்துள்ளார்.

உண்ணாவிரதம்வீட்டு காவலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து, சந்திரபாபு, இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இரவு 8 மணி வரை இந்த போராட்டம் தொடரும் எனக்கூறியுள்ளார்.

பதற்றம்ஆந்திர போலீஸ் டிஜிபி கவுதம் சவாங் கூறுகையில், சந்திரபாபு முன்னெச்சரிக்கையாக தடுப்பு காவலில் உள்ளார். அவரின் நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரிக்கும். குண்டுர் மாவட்டத்தின் பல்நாடு பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்றார்.

வாக்குவாதம்உன்டவள்ளி என்ற இடத்தில் வசிக்கும், நாரா லோகேஷ், பேரணியில் பங்கேற்க சென்ற போது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். விஜயவாடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து, அவரும் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.


சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் கூறுகையில், ஆந்திரா முழுவதும் எங்களது கட்சியை அழிக்க ஆளுங்கட்சி முயற்சி செய்கிறது. நாங்கள் ஜனநாயக ரீதியில் செயல்படுகிறோம். ஆனால், எங்களது கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை. சர்வாதிகார நடவடிக்கை. தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆளுங்கட்சி எம்எல்ஏ எங்களை வெளிப்படையாக மிரட்டுகிறார் என்றார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (34)

 • Rajesh - Chennai,இந்தியா

  ஆட்சியில் இருக்கும்போது மக்கள் விரோத செயல்களில் ஈடுபடவேண்டியது. ஆட்சி போனவுடன் குய்யோ முய்யோ என்று கத்திக்கொண்டு பேரணி புறப்பட வேண்டியது இது என்ன நியாயம்?

 • அருண்நம்பி - Chennai,இந்தியா

  ஆ ஊ நாக்க வீட்டுக்காவல், இதுக்கு பேர்தான் கௌரவ அரசியல் பழிவாங்களோ?

 • karupanasamy - chennai,இந்தியா

  ஏலேய் சொடல எங்க ல இருக்க வா ல போராட்டத்துக்கு வா ல அப்புறம் கோட்டி காரன்னு சொல்லிப்புட போறான் ல.

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  Mr.Chandrbabu is a very good administrator and worked really for welfare of Andhra. He is responsible to interconnect the rivers inside his state without expecting the Central Government's help. He was demanding Special status for Andhra and BJP agreed first, but when they got majority, forgot this promise. So he left BJP, after giving several chances to BJP to fulfill its promise. YSR is going in wrong direction. He demolished Babu's Bungalow .He could have levied heavy penalties and allowed him to stay there. It is another Babar Masjid case. these people talk about Hindu intolerance. He has not called for any revolution against the Government. Why to house arrest him ? Misusing the authority is bad.He should remember JJ when she arrested MK and next election she got defeated. The only mistake Chandra Babu did was to dream for P.M. post. Though he is one of the fit persons, the time is not ripe for him to be P.M. now.

 • prabhu -

  ஆந்திராவில் உள்மாநில அரசியல் சிக்கலில் சந்திரபாபு நாயுடு சிறைவைக்கபட்டிருக்கின்றார்விஷயம் இன்னும் திமுக தலைவருக்கு தெரியாது போல ஆந்திரா காஷ்மீரை விட தொலைவில் இருப்பதுதான் அதற்கு காரணம் அன்றி வேறல்ல..இந்தியாவில் எங்கு ஜனநாயகம் மறுக்கபட்டாலும் திமுக பொறுக்காது என்பது ஜகன்மோகன் ரெட்டிக்கும் தெரியவில்லைதிமுக தலைவருக்கு விஷயம் தெரியட்டும் , அதன் பிறகு என்ன ஆகும் தெரியுமா? ஜெகன் மோகன் ரெட்டியினை ரொட்டியாக்கிவிடுவார்காஷ்மீர் தலைவர்கள் வீட்டுகாவலில் இருந்தால் பொறுக்கா திமுக, சந்திரபாபு நாயுடுவினை மட்டும் கைவிடுமா என்ன?இவ்வளவுக்கும் நாயுடு திராவிட இனம்..இனி திமுக விசாகபட்டினத்தில் போராட கிளம்பும் பாருங்கள், அவர்கள் மானஸ்தர்கள் சும்மா விடமாட்டார்கள்

Advertisement