Advertisement

மொகரம் விழாவில் தீ மிதித்த இந்துக்கள்

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, முதுவன்திடலில், பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் உள்ளது. இப்பகுதி இந்துக்கள், நிலத்தில் விளையும் தானியங்களை, பள்ளிவாசலுக்கு முதலில் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இங்கு, மத ஒற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில், பல ஆண்டுகளாக மொகரம் பண்டிகையன்று இந்துக்கள் பூக்குழி இறங்குவர்.இதற்காக, ஒரு வாரத்திற்கு முன், காப்பு கட்டி விரதம் இருப்பர். நேற்று, பள்ளிவாசல் முன் அமைத்துள்ள குண்டத்தில், ஆண்கள் தீக்குழி இறங்கியும், பெண்கள், தலையில் நெருப்பு கங்குகளை கொட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்த இந்துக்களுக்கு இருக்கும் பிரச்சினையே இதுதான் , யார் என்ன சொன்னாலும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் , அது மூட பழக்க வழக்கம் என்று உணர்ந்து கைவிட வேண்டும் , தீ மிதிப்பதென்றால் திரௌபதி அம்மன் கோவிலில் செய்யவேண்டும் , அதே போல மசூதிக்கு வெளியில் நின்றுகொண்டு உள்ளே இருந்து வருவோரிடம் தாயத்து காட்டிக்கொள்வது , ஊத்தி விடுவது எல்லாம் தேவை அற்றது , உள்ளே அவர்கள் பூஜை செய்து எதையும் கொண்டுவருவதில்லை , கடவுளை கும்பிட்டு வருகிறார்கள் , அங்கெ விக்கிரகம் எல்லாம் இல்லை, காலி இடம் தான்.

 • Ashanmugam - kuppamma,இந்தியா

  இந்த நிகழ்வு ஒர் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்த எடுத்துக்காட்டாக அமையும்.

  • Darmavan - Chennai,இந்தியா

   இது போல்முஸ்லிம்கள் ஏதாவது செய்வார்களா. இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏமாற்று வார்த்தை.

 • prakashc - chennai,இந்தியா

  கே வீரமணி தீ கா கம்பெனி ,முஸ்லீம் சகோதரர்கள் தங்கள் மார்ப்புகலில் அறுந்து கொள்வதை மூட நம்பிகை என்றும் படிப்பினையை இல்லை என்றும் கூறிவருகிறான். அவனுக்கு அவன் வீடு தாலி முக்கியம் . மற்ற மத உணருவுகளிஇல் தளியிடும் வீரமணி நிச்சயம் தண்டிக்க படவேண்டும்.

 • ஆப்பு -

  எத்தைத் தின்னா பித்தம் தெளியும்கற மனநிலை நம்முடையது.

 • Govind - Delhi,இந்தியா

  மொகரம் பண்டிகை கிடையாது ... இஸ்லாமியர்களுக்கு அது ஒரு துக்க தினம். இதை யாராவது தெளிவுபடுத்தினால் நல்லது . மேலும் இது மத ஒற்றுமையையும் கிடையாது ஏனெனில் தீ மிதிப்பது என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு பழக்கம் அது இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. மொகரம் அன்று பூ கரகம் எடுப்பது என்பதும் அவர்கள் வழக்கம் இல்லை. இது பாமர மக்களிடேயே மத ஒற்றுமை ஏற்படுத்துவதால் இதை குறையாக பார்க்காமல் விடுவதே நல்லது.

  • abdul rajak - trichy,இந்தியா

   முகரம் மாதம் பத்தாம் நாள் மோசஸ் மற்றும் இஸ்ரவேலர்களை இறைவன் காப்பாற்றிய நாள் . அதற்காக முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நோன்பு வைக்கிரோம். முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான நாள் . ஈராக் ஈரானில் இந்தியாவில் உள்ள சியா பிரிவினர் துக்க தினமாக நினைக்கின்றனர் . முஸ்லிம்கலிருந்து பிரிந்து போய் தங்களை சியா என்றும் சன்னி என்றும் டவ்ஹீத் என்றும் தனி தனி வழிகளை கண்டுபிடித்து செயல் படுகின்றனர் .

  • Darmavan - Chennai,இந்தியா

   இது எந்த மத ஒற்றுமையும் ஏற்படுத்தாது,இந்துக்கள் நம் கடவுளை மேன்மையாகி ஏற்கிறார்கள் என்று முஸ்லிம்கள் எண்ணம் ஆக்கும் .

Advertisement