Advertisement

ஒளியிலே தெரிவது! ஆண்டுக்கு 32 லட்ச ரூபாய் கட்டணம் மிச்சம்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில், 2.34 கோடியில் சூரிய ஒளி மின்சார வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இது தவிர, 11.50 கோடி மதிப்பில், மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளதால், ஆண்டுதோறும் செலுத்தும் மின் கட்டணத்தில், 31.97 லட்சம் மிச்சமாகும்.
திருப்பூர் மாநகராட்சியில், ஆயிரம் கோடியில், பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில், மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு, 2.34 கோடி ரூபாயில் சூரியஒளி மின்சார வசதி அளிக்கும் திட்டம் துவக்கப்பட உள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில், பல லட்சம் யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மின் வாரியத்துக்கு ஆண்டுதோறும், பல லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சியின், 132 கட்டடங்களின் மேற்கூரையில், சூரியஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தேவைக்கேற்ப, 302.5 கிலோவாட் முதல் அதிகபட்சம், 1380 கிலோ வாட் வரை சூரியஒளி தகடுகள் பொருத்தப்படவுள்ளன.
அதாவது, பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி மைய அலுவலகம், கோட்ட அலுவலகங்கள், மாநகராட்சி மருந்தகங்கள், வார்டு அலுவலகங்கள், மாநகராட்சிப் பள்ளிகள், வரி வசூல் மையங்கள், அங்கன்வாடி மையம், சத்துணவு மையம் என மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் சூரியஒளி தகடுகள் பொருத்தப்படவுள்ளன.
இதனால், மாநகராட்சி கட்டடங்களின் தற்போதைய மின்சார பயன்பாடு சூரியஒளி மின்னாற்றல் மூலம் ஈடுசெய்யப்படும் என்பதால் மின்வாரியத்துக்கு மாநகராட்சி செலுத்தும் மின் கட்டணம் 31.97 லட்சம் மிச்சமாகும்இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
7,900 யூனிட் உற்பத்தி
இடுவாய் பகுதியில், 14.69 ஏக்கர் பரப்பில், 11.50 கோடி மதிப்பில், சூரியஒளி தகடுகள் நிறுவி, 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையம் நிறுவப்படவுள்ளது. ஏற்கனவே, 23.6 ஏக்கர் இடத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள உற்பத்தி நிலையத்தில், 4.8 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்திட்டம் முழுமை பெற்றால், ஒரு நாளில், 7900 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • RM -

    Solar panels usage should be encouraged in countries like india where sunlight is available throughout the year .

Advertisement