Advertisement

அமைதி நடவடிக்கையில் சீர்த்திருத்தம் தேவை

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஐ.நா., அமைதி படையின் நடவடிக்கைகள் குறித்த விவாதம், அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள அதன், தலைமையகத்தில் நடந்தது. இதில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர், அக்பருதீன் பேசுகையில், 'சர்வதேச அளவில், அமைதிக்கும், பாதுகாப்புக்கும், இப்போது, கடும் சவால் ஏற்பட்டுள்ளது. அதனால், ஐ.நா.,வின் பாதுகாப்பு நடவடிக்கைகளில், பெரும் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும். எந்த சவாலையும் முறியடிக்கும் வகையில், அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்' என்றார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement