Advertisement

டிரைவிங் பயிற்சி இளம்பெண் பலி

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, இருசக்கர வாகனம் ஓட்டும் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில், இளம்பெண்பரிதாபமாக இறந்தார்.



குன்றத்துாரை அடுத்த கோவூரைச் சேர்ந்தவர் அபிநயா, 20. இவர், காட்டுப்பாக்கத்தில் உள்ள, தனியார் ஷோரூமில் வேலை செய்தபோது, பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்த, அண்ணாமலை, 21, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.



நேற்று மாலை, அபிநயாவிற்கு, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், இருசக்கர வாகனம் ஓட்ட, அண்ணாமலை பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது, சாலை தடுப்பு கம்பியில் மோதி, அபிநயா சம்பவ இடத்திலேயே இறந்தார்.பின்னால் அமர்ந்திருந்த, அண்ணாமலை படுகாயமடைந்தார். பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement