Advertisement

இருவழி பாதையாக அண்ணாசாலை இன்றும், நாளையும் சோதனை ஓட்டம்

சென்னை:மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதால், அண்ணா சாலை, இரு வழிபாதையாக மாற்றப்பட்டு, இன்றும், நாளையும், சோதனை ஓட்டம் நடைபெறும் என, போலீசார் அறிவித்துள்ளனர்.போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:


* அண்ணா சாலையில், ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து, வெல்லிங்டன் சந்திப்பு வரை, இரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து, ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது


* ஒயிட்ஸ் சாலை, இரு வழிபாதையாக மாற்றப்படுகிறது


* அண்ணா மேம்பாலத்தில் இருந்து, அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் இல்லை அண்ணா சிலையில் இருந்து, ஜெமினி அல்லது தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், எல்.ஐ.சி., மற்றும் டி.வி.எஸ்., வழியாக, அண்ணா மேம்பாலம் செல்லலாம்


* அண்ணா சிலையில் இருந்து, பின்னி சாலை வழியாக செல்ல முயலும் வாகனங்கள், ஸ்பென்சர்வலது புறமாக திரும்பி செல்லலாம் பாரதி சாலை வழியாக செல்லும் வாகனங்கள், ஒயிட்ஸ் மற்றும் ஜி.பி.ரோடு வழியாக, அண்ணா சாலையை அடையலாம்


* அண்ணா சாலையில் இருந்து, ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்ல தடை செய்யப்படுகிறது ஒயிட்ஸ் சாலையில் இருந்து, அண்ணா சாலை செல்லும் வாகனங்கள், திரு.வி.க., சாலையில் இடதுபுறம் திரும்பி, பின், சத்தியம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக செல்லலாம்.


* அண்ணா சாலையில், ஜி.பி.ரோடு முதல், ஒயிட்ஸ் சாலை வரை, 10 ஆண்டுகளுக்கு பின், இரு வழிபாதையாக மாற்றப்பட்டு, இன்றும், நாளையும் நடக்கும் சோதனை ஓட்டத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, போலீசார் அறிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement